சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமைகள் அனைத்தும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்

Google Oneindia Tamil News

சென்னை: ஞாயிறுகிழமையான இன்று முழு லாக்டவுன் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலாகிறது. இன்று காய்கறி, மளிகை பொருட்களின் கடைகள் இயங்காது. இன்றைய தினம் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.

அவசிய தேவைகளுக்குக் கூட வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. வீட்டை விட்டு வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

Tamil Nadu complete lockdown Sunday Today

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஜூலை 5ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுமையான ஊரடங்கும் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மதுரையில் இன்று வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை

ஆறாம் கட்ட ஊரடங்கை அரசு அறிவித்த அன்றே அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ''ஜூலை 5, ஜூலை 12, ஜூலை 19 மற்றும் ஜூலை 26 என நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில்

பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

ஆகவே, இன்று எவ்வித அத்தியாவசியத் தேவைக்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் மருத்துவக் காரணமன்றி வேறு அவசியத் தேவைகளுக்கும் வெளியில் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படும். மருத்துக் கடைகள் தவிர மற்ற கடைகளைத் திறந்து வைத்தால் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
There will be a complete lockdown across Tamil Nadu on today Sunday on July 12. July 19 and July 26 lockdown imposes strict in all over TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X