சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதிப்பைவிட டிஸ்சார்ஜ் அதிகம்.. தமிழகத்தில் நல்ல மாற்றம்.. இன்றைய அப்பேட்.. விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை" தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது.

தமிழத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டாதாகவே சூழ்நிலை உணர்த்துகிறது. மக்கள் வழக்கமான வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். எனினும் சமூக இடைவெளி பெரிய அளவில் பின்பற்றும் சூழல் எங்கும் நிலை.

இருப்பினும் கொரோனா பாதிப்பு தமிழத்தில் நிலையான அளவிலேயே உள்ளது. 6000 என்கிற அளவிலேயே உள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும். உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

முழு ஊரடங்கு ரத்தான முதல் நாளே.. ஏற்காடு மலைக்கு இ பாஸின்றி குவிந்த மக்கள்.. கொரோனா பரவும் அபாயம்முழு ஊரடங்கு ரத்தான முதல் நாளே.. ஏற்காடு மலைக்கு இ பாஸின்றி குவிந்த மக்கள்.. கொரோனா பரவும் அபாயம்

குணம் எவ்வளவு

குணம் எவ்வளவு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 5,820 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,186 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பலி

மாவட்ட வாரியாக பலி

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில் 17 பேரும், கோவையில் மற்றும் கடலூரில் தலா 5 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், திருப்பூரில் 4 பேரும் பலியாகி உள்ளனர். வேலூர், செங்கல்பட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம், திருநெல்வேலி உள்பட 7 மாவட்டங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர், ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக 2862 பேர் பலியாகி உள்ளனர்.

84,034 பரிசோதனை

84,034 பரிசோதனை

தமிழகத்தில் இன்று 84,034 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 51,26,231 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழத்தில் கொரோனா பாதித்தவர்களில் 4,04,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 51,458 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

மாவட்ட நிலவரம் என்று பார்த்தால் சென்னையில் கொரோனாவால் இன்று 955 பேர் பாதிக்கப்பட்டுளளனர்.சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141654 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேரும், கடலூரில் 388 பேரும், செங்கல்பட்டில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 272 பேரும், திருவள்ளூரில் 246 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamil nadu coronavirus positive cases rises5783 on Today. 88 people have been killed by corona in a single day today. Similarly, 5,820 people have discharged from corona in tamilnadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X