சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46,306 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5500 என்கிற நிலையான அளவில் இருந்து வரும் அதேநேரம் நோயாளிகள் எண்ணிக்கை 46 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதேபோல் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவையில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு!தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு!

இன்று எவ்வளவு

இன்று எவ்வளவு

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எவ்வளவு

டிஸ்சார்ஜ் எவ்வளவு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,554 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 921 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 459 பேரும், சேலத்தில் 260 பேரும், கடலூரில் 168 பேரும், திருவள்ளூரில் 239 பேரும், திருப்பூரில் 217 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு பலி

இதுவரை எவ்வளவு பலி

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 70 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 6 பேரும், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் தலா 5 பேரும், நாமக்கல், திருப்பத்தூரில் தலா4 பேரும் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை 80 ஆயிரம்

பரிசோதனை 80 ஆயிரம்

தமிழகத்தில் பிசிஆர் பரிசோதனை அதிக அளவு நடத்தப்படுகிறது. இன்று மட்டும் 80,465 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 71,81,125 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 78,614 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 69,66,657 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,306 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

மாவட்ட நிலவரத்தை பார்த்தால் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை முதல்முறையாக ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,64,744
ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 11043
பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 587 பேரும், சேலத்தில் 256 பேரும், செங்கல்பட்டில் 249 பேரும், திருவள்ளூரில் 249 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamil nadu coronavirus positive cases rises 5,589 on september 28. 70 people have been killed by covid 19 in a single day on today. Similarly 5,554 cases have discharged from covid 19 in tamilnadu on septemer 28;
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X