சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வழிகாட்டு நெறிமுறையை மாற்றிய தமிழக அரசு.. சர்ச்சைக்குள்ளான மாத்திரை பட்டியலிலிருந்து நீக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோயளிகள் சிகிச்சைக்கு, புதிதாக ஒரு, வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மருத்துவத் துறை நிபுணர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசு கடந்த 3 நாட்கள் முன்பு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான் நேற்று புதிதாக ஒரு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த முறை வெளியிட்ட நெறிமுறையில் நான்கு வகையாக நோய் பாதிப்பு பிரித்து சொல்லப்பட்டிருந்தது. இந்த முறை அது மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை கொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை

வித்தியாசங்கள் என்ன?

வித்தியாசங்கள் என்ன?

வீட்டு தனிமையில் இருப்பவர்கள் பராமரிப்பு மையங்களில் இருப்பவர்கள் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகையினரும் எந்த மாதிரி சிகிச்சை பெற வேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை 4 வகை நோயாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. குறைந்த நோய் பாதிப்புடன் உள்ளவர்களில் வேறு இணை நோய் இல்லாமல் இருந்தால், அவர்களின் உடல் நலத் தகுதியை பரிசோதித்து, வீட்டு கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தலாம். வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால், கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என கடந்த வாரம் வெளியிட்ட அறிவுறுத்தல் கூறியது. இம்முறை அப்படியில்லை. இணை நோய்கள் இருந்தாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவீதம் மற்றும் அதற்கு மேல் இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முறைக்கு குறைவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட முடியும் என்றாலோ, வீட்டிலிருந்து சிகிச்சை பெறலாம் என்று இப்போது கூறப்பட்டுள்ளது.

பேக்டீரியா எதிர்ப்பு மாத்திரை

பேக்டீரியா எதிர்ப்பு மாத்திரை

பராமரிப்பு மையங்களில் உள்ளவர்களுக்கு, அசித்ரோமைசின்-azithromycin மாத்திரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஆன்டிபயோட்டிக் மாத்திரையாகும். இந்த மாத்திரை விஷயத்தில் ஏற்கனவே சர்ச்சை இருக்கிறது. ஆனால் அரசு மாற்றம் செய்யவில்லை. பேக்டீரியா தொற்றை குணப்படுத்த கொடுக்க கூடியது. கொரோனா ஒரு வைரஸ் என்பதால், இதன் செயல் திறன் பூஜ்யம் என்கிறார்கள். ஆனால் கொரோனா சிகிச்சையின்போது பாக்டீரியா தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுக்க இது உதவக்கூடும் என்று மருத்துவர்களில் பலரும் வரவேற்கிறார்கள்.

பிளாஸ்மா சிகிச்சை

பிளாஸ்மா சிகிச்சை

இந்த வழிகாட்டு நெறிமுறையில், ரெம்டெசிவிர், ஹைட்ரோக்சிகுளோரோகுயின், பிளாஸ்மா சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படவில்லை. பிளாஸ்மா சிகிச்சை சில நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசே பரிந்துரைத்தால், அதை மருத்துவமனைகள் தொடரக் கூடும் என்று விமர்சனங்கள் எழுந்தன. எனவே, இப்போது விதிமுறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

3 வகைகள்

3 வகைகள்

ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முறை அல்லது அதற்கு குறைவாக மூச்சு விட முடிந்தாலோ, வீட்டிலிருந்து சிகிச்சை பெறலாம். ஆக்சிஜன் அளவு 90 மற்றும் 94க்கு இடைப்பட்ட அளவுக்கு இருந்தாலோ, ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 வரை மூச்சு விடத் தேவையிருந்தாலோ, கொரோனா பராமரிப்பு மையங்களில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். 90 சதவீதத்திற்கும் குறைவாக ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள், மற்றும் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேலே மூச்சு விட தேவையுள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நோயாளிகள், 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Tamilnadu government has issued covid-19 case management protocol which is welcomed by many medical experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X