சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

34 மாவட்டங்களில் கொரோனா பரவல்.. தென் மாவட்டங்களில் கிடுகிடு.. மாவட்ட வாரியான விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஈரோட்டில் யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அதேநேரம் மற்ற 34 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதையும், எத்தனை பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும்வெளியிட்டு வருகிறது. இந்த வெளியீட்டில் குணம் அடைந்தவர்கள் விவரம், ஆக்டிவ் கேஸ்கள் விவரம், நோய் தொற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்,. மரணம் அடைந்தவர்கள் விவரம் மற்றும் வயது வாரியாக பாதிப்பு, சோதனைகள் எவ்வளவு பேருக்கு நடத்தப்படுகிறது பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

தமிழகத்தில் சூப்பர் மாற்றம்.. ஒரே நாளில் 4,545 குணம் அடைந்து சாதனை.. குறைந்தது ஆக்டிவ் கேஸ்கள்தமிழகத்தில் சூப்பர் மாற்றம்.. ஒரே நாளில் 4,545 குணம் அடைந்து சாதனை.. குறைந்தது ஆக்டிவ் கேஸ்கள்

குமரியில் அதிகம்

குமரியில் அதிகம்

தமிழகத்தில் வழக்கம் போல் சென்னையில் தான் இன்று கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் 1203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரையில் 334 பேருக்கும், விருதுநகரில் 253 பேருக்கும், திருவள்ளூரில் 217 பேருக்கும், கன்னியாகுமரியில் 119 பேரும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும், ராணிப்பேட்டையில் 125 பேரும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் கொரோனா

வேலூரில் கொரோனா

வேலூரில் 117 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும், ராணிப்பேட்டையில் 125 பேருக்கும், திருவண்ணாமலையில் 99 பேருக்கும், தேனியில் 94 பேருக்கும், தென்காசியில் 62 பேருக்கும், திருச்சியில் 55 பேருக்கும், புதுக்கோட்டையில் 43 பேருக்கும், கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்கு பாதிப்பு இல்லை

எங்கு பாதிப்பு இல்லை

கடலூரில் 65 பேருக்கும் சிவகங்கையில் 15 பேருக்கும், கோவையில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 87 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 28 பேருக்கும், ராமநாதபுரத்தில் 22 பேருக்கும், தஞ்சாவூரில் 34 பேருக்கும், திருவாரூரில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பூரில் 17 பேர், திண்டுக்கல்லில் 7 பேர், தர்மபுரியில் 4 பேர், நாமக்கல்லில் 5 பேர், நாகப்பட்டினத்தில் 4 பேர்,.நீலகிரியில் 5 பேர், விழுப்புரத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஈரோட்டில் யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 475
  • செங்கல்பட்டு 6942
  • சென்னை 71230
  • கோவை 839
  • கடலூர் 1342
  • தர்மபுரி 124
  • திண்டுக்கல் 730
  • ஈரோடு 286
  • கள்ளக்குறிச்சி 1274
  • காஞ்சிபுரம் 2836
  • கன்னியாகுமரி 757
  • கரூர் 174
  • கிருஷ்ணகிரி 203
  • மதுரை 4674
  • நாகப்பட்டினம் 314
  • நாமக்கல் 118
  • நீலகிரி 150
  • பெரம்பலூர் 170
  • புதுக்கோட்டை 418
  • ராமநாதபுரம் 1479
  • ராணிப்பேட்டை 1312
  • சேலம் 1340
  • சிவகங்கை 576
  • தென்காசி 530
  • தஞ்சாவூர் 496
  • தேனி 1222
  • திருப்பத்தூர் 322
  • திருவள்ளூர் 5205
  • திருவண்ணாமலை 2633
  • திருவாரூர் 576
  • தூத்துக்குடி 1416
  • திருநெல்வேலி 1285
  • திருப்பூர் 237
  • திருச்சி 1059
  • வேலூர் 1932
  • விழுப்புரம் 1233
  • விருதுநகர் 1228
    • விமான நிலைய கண்காணிப்பில் 448
    • (வெளிநாடு)

      • விமான நிலைய கண்காணிப்பில் 376
      • (உள்நாடு)

        • ரயில் நிலைய கண்காணிப்பில்: 421

English summary
district wise abstract of covid 19 positive cases at july 7, Coronavirus prevalence is high today in Virudhunagar, Madurai, Tirunelveli, Thoothukudi, Kanyakumari and Theni. full list here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X