• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"மாஸ்டர்" எடப்பாடி.. தனித்து போட்டியிடுமா அதிமுக.. பாஜகவை கழற்றி விடுமா.. ஓ.பி.எஸ். என்ன செய்வார்?

|

சென்னை: போகிற போக்கை பார்த்தால், பாஜகவை எடப்பாடியார் கழட்டிவிட்டு விடுவார் போலவே தெரிகிறது.. நடக்கிற சம்பவங்களும், கேள்விப்படுகிற சமாச்சாரங்களும் அவ்வளவு திருப்திகரமாகவும் இல்லை.

கடந்த ஓரிரு வருடங்களாகவே அதிமுகவுடன் பாஜக இணக்கமான உறவில் இல்லை.. கூட்டணியில் இருந்தாலும் தாமரை இலை நீராகவே உள்ளனர்.. சுமூகமான போக்கையும் கடைப்பிடிக்கவில்லை.

நிறைய முரண்பாடுகள், நிறைய அதிருப்திகள் அதிமுக-பாஜகவுக்குள் நாளுக்கு நாள் நடந்து வருகின்றன.. இல்லையென்றால், கூட்டணியில் இருக்கிற கட்சி என்றுகூட பார்க்காமல், நயினார் நாகேந்திரனை எடப்பாடியாரே அதிமுகவுக்கு வருமாறு அழைத்திருக்க மாட்டார்.

புதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணைபுதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணை

அதிருப்தி

அதிருப்தி

இதைதவிர முருகனின் செயல்பாடுகளில் அதிமுக கொஞ்சம் அப்செட் ஆகியும் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் பாஜகவின் எஸ்விசேகர் உள்ளே புகுந்து, அதிமுகவுக்கு அட்வைஸ் தரவும், அந்த விவகாரம் இன்னும் கொந்தளித்தது.. இப்போது கோர்ட் வரை போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்துள்ளதால், இன்னும் காட்டம் அதிகமாக தென்படும்.

எஸ்வி சேகர்

எஸ்வி சேகர்

ஏற்கனவே, விபி துரைசாமி பற்ற வைத்துள்ள இந்த நெருப்பால் திமுகவுக்கே அதிக பலன் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லி வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததன் விளைவுகள், செயல்பாடுகளை மக்கள் தற்போதும் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.. இவர்கள் மீண்டும் கூட்டணி வைத்தால், அது மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் சட்டமன்ற தேர்தலில் ஏற்படுத்துமா என்பதுதான் எடப்பாடியாரின் சந்தேகமாக உள்ளதாம்.

கூட்டணி

கூட்டணி

அதனால், இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற யோசனையில்கூட இருப்பதாக சொல்கிறார்கள்.. ஏனென்றால், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததன் விளைவுகள், செயல்பாடுகளை மக்கள் தற்போதும் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.. மீண்டும் கூட்டணி வைத்தால், அது மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் சட்டமன்ற தேர்தலில் ஏற்படுத்திவிடும் என்பதுதான் எடப்பாடியாரின் கணிப்பு.

திமுக

திமுக

இப்போதுதான் தொற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது.. கொரோனா குற்றச்சாட்டுகளில் திமுகவை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.. ஒருவழியாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டும், தளர்வுகளை அறிவித்தும், இழந்த செல்வாக்கை எடப்பாடியார் பெற்று வருகிறார்.. 5 மாசமாக ஆளும் தரப்பு மீது வெகுஜன மக்களுக்கு கோபம் இருந்தாலும், பெரிய அளவு அதிமுக மீது வெறுப்பு இல்லை என்பதையும் எடப்பாடியார் உணர்ந்துள்ளார்.

அதிமுக

அதிமுக

இந்த சமயத்தில் முருகன் 60 சீட்டுக்கு அடி போட்டதும், தமிழகத்தில்தான் வழக்கு போடணும் என்று பொடி வைத்து பேசியதும், அதிமுக தரப்புக்கு ரசிக்கும்படியாக இல்லை.. அதனால், பாஜகவுடன் கூட்டணி என்பது டவுட்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... அப்படி பாஜக வேண்டாம் என்று எடப்பாடியார் தரப்பு முடிவெடுத்தால், அதற்கு ஓபிஎஸ் தரப்பு என்ன சொல்லுமோ என்பது அடுத்த சந்தேகம்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் விவகாரம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.. இதைதவிர, மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சரவையில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ்-க்கு ஒரு ஆசை இருந்து வருகிறது.. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால், இது நிறைவேறுமா? அதற்கு அவர் சம்மதம் தருவாரா என்பதே அடுத்த கேள்வி!

  அடங்காத அரியர் பாய்ஸ்.. 'மாணவர்களின் மனித கடவுளே..' முதல்வரை வாழ்த்தி சேலத்தில் செம போஸ்டர்
  பாஜக

  பாஜக

  ஆனால், ஒன்று, பாஜகவை மறுபடியும் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டால் அதிமுகவுக்கு வழக்கமாக கிடைக்கும் ஓட்டுக்கள்கூட கிடைக்காமல் போய்விடும் என்று மட்டும் எடப்பாடியார் உணர்ந்துள்ளதாக சொல்கிறார்கள்.. எனவே, மறுபடியும் கூட்டணி வைக்கப்படுமா? பாஜக கேட்ட சீட் கிடைக்குமா? ஓபிஎஸ் சம்மதம் சொல்வாரா? அதிமுகவுக்குள் இரட்டை தலைமை விவகாரம் மறுபடியும் எழுமா? என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

  English summary
  Will AIADMK keep BJP in the alliance or send out?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X