சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் வீட்டு மின் கணக்கீட்டு முறையில் சந்தேகமா.. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: உங்கள் வீட்டு மின் கணக்கீட்டு முறையில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் பலருக்கும் மின் கட்டணம் அதிகமாக வருவதாக குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனாவிற்கு பின் மின் கணக்கீட்டு முறையில் குளறுபடி இருப்பதாகவும், இதனால் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதனை மறுத்துள்ள மின்சார வாரியம் சந்தேகம் இருந்தால் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அறிவித்துள்ளது.

சென்னை உட்பட 6 மாவட்ட மக்களுக்கு சான்ஸ்.. மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு சென்னை உட்பட 6 மாவட்ட மக்களுக்கு சான்ஸ்.. மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

இணையதளத்தில் அறியலாம்

இணையதளத்தில் அறியலாம்

இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்து கொள்ள மின் கட்டண விபர இணையதளத்திலோ (tangedco-bill status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் ( tangedco-online payment portal) மூலமாகவோ தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி கணக்கீடு

எப்படி கணக்கீடு

முந்தைய மாத மின் கட்டண தொகையே (pmc) கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட தொகையை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்,

மின்வாரியம் விளக்கம்

மின்வாரியம் விளக்கம்

விளக்கம்:

https://www.tangedco.gov.in/

மின் கட்டண சேவைகள்
(Billing services)

மின் கட்டண விபரம் இணையதள மின் கட்டணம்
(bill status) (online bill payment)

கணக்கு விபரம்
(account summary)

மொத்த தொகை

Recommended Video

    LockDown EB Bill : மின்சார கட்டணம் அதிகம், நடிகை காத்திகா
    சந்தேகம் உள்ளதா

    சந்தேகம் உள்ளதா

    மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது. எனவே மின்சார கணக்கீடு தொடர்பாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மின வாரியத்தின் இணைத்திற்கு சென்று சென்ற மாத கணக்கீடு இம்மாதம் கணக்கீடு உள்ளிட்ட விவரங்களை அறியலாம். உங்கள் மின் கட்டணம் எவ்வளவு என்பதையும் அறியலாம்.

    English summary
    Doubtful in your home electricity calculation system: tamil nadu electricity board Important Notice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X