சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'வெள்ளை அறிக்கை' 9ம் தேதி வெளியீடு.. அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வரப்போகும் உண்மைகள்.. பிடிஆர் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை : முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள், நிதி ஆதாரங்கள், கடன்கள், கஜானா நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய தமிழக நிதி நிலை தொடர்பான "வெள்ளை அறிக்கை" வரும் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.

தமிழகத்தின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பல்வறு பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஒரு மாதமாக ஆலோசித்து வந்தார்.

அவர்கள் கொடுத்த ஆலோசனை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய ஆலோசனைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, நிதி நிலையை பொருக்க பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைதிகள் விடுதலை- மாநில அதிகாரத்தை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்- 7 தமிழர் விடுதலைக்கு வழி-ரவிக்குமார்கைதிகள் விடுதலை- மாநில அதிகாரத்தை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்- 7 தமிழர் விடுதலைக்கு வழி-ரவிக்குமார்

நகைக்கடன் தள்ளுபடி

நகைக்கடன் தள்ளுபடி

இதேபோல் பட் ஜெட்டில் திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளான, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, கேஸ் மானியம், நகைக்கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் தமிழக அரசின் நிதி நிலைமைகளை கருத்தில் கொண்டே முடிவு செய்யப்படும் என்று சொல்கிறார்கள்,

கடன் விவரங்கள்

கடன் விவரங்கள்

ஏனெனில் முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்தே தமிழகம் கடுமையான நிதி நிலை நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் முடிவில் கடன் அளவு 5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. சரியாக எவ்வளவு கடன் இருக்கிறது. எவ்வளவு கோடியை வட்டியாக தமிழக அரசு செலுத்துகிறது. எவ்வளவு பணம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக செல்கிறது. திட்டங்களுக்கு செலவு செய்ய அரசிடம் உள்ள தொகை எவ்வளவு, மத்திய அரசு தர வேண்டிய நிலுவை தொகை எவ்வளவு போன்ற விவரங்கள் பட்ஜெட் வெளியாகும் அன்று தெரியவரும்.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

மேலும் பட்ஜெட்டில் எந்தெந்ந சமூக நலத்திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கப்போகிறது என்பதும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது தர வேண்டிய நிலுவை தொகை எப்படி தரப்படும் என்பது குறித்தும் பட்ஜெட்டின் போது அரசு அறிவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பிடிஆர் வெளியீடு

பிடிஆர் வெளியீடு


அதேநேரம் அதற்கு முனனதாக தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை- ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்,

நிதி ஆதாரங்கள் கடன் விவரங்கள்

நிதி ஆதாரங்கள் கடன் விவரங்கள்

தமிழக அரசின் கடன், செலுத்தும் வட்டி, வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளை அறிக்கையில், கடன் விபரங்களுடன் சென்னை மெட்ரோ வாட்டர் வரவு, செலவு விவரங்களும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. வெள்ளை அறிக்கையில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள், நிதித் ஆதாரங்கள், கடன்கள், கஜானா நிலவரம் ஆகியவை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வரப்போகிறது.

English summary
Tamil Nadu Finance Minister PTR Palanivel Thiagarajan releases a 'white paper' on august 9 The "White Paper" will be released on the 9th, detailing the activities of the previous AIADMK government, financial sources, loans and treasury status. Tamil Nadu Finance Minister PTR Palanivel Thiagarajan releases a 120-page white paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X