சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக முழு ஊரடங்கில் அமேசான், பிளிப்கார்ட் செயல்பட முடியாது.. பல சரக்கு, உணவு சப்ளைக்குதான் அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை உருவாகி உள்ளது.

Recommended Video

    Tamil Nadu 14-day Complete Lockdown From May 10 Till 24 | Oneindia Tamil

    செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் மற்றும் பல பொருட்களை இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்கின்றன.

    ஆனால் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி இதை செய்ய முடியாது.

    ஊரடங்கு ஏன் முக்கியமானது? இதன் மூலம் கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா? முழு விளக்கம்ஊரடங்கு ஏன் முக்கியமானது? இதன் மூலம் கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியுமா? முழு விளக்கம்

    பலசரக்குகள்

    பலசரக்குகள்

    ஏனெனில், முழு ஊரடங்கின்போது உணவு வினியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிகம் அதாவது இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன்

    ஆன்லைன்

    இதன்மூலம் இ-காமர்ஸ் நிறுவனங்களில் பொருட்களை ஆர்டர் செய்தவர்களுக்கு அது இப்போதைக்கு கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. புதிதாக ஆர்டர் செய்ய முடியாத நிலையும் உருவாகியுள்ளது. அதேநேரம், ஸ்விக்கி, ஜொமோட்டோ, பிக் பாஸ்கெட், இறைச்சி சப்ளை செய்யும் லிசியஸ் போன்ற நிறுவனங்கள் செயல்படலாம்.

     செல்போன்கள்

    செல்போன்கள்

    அத்தியாவசியமற்ற சேவைகள் பிரிவின்கீழ் செல்போன் விற்பனை செய்யும் கடைகள் வருகின்றன. எனவே அவை திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவும் அவற்றை வாங்க முடியாது என்பதால் அவசர தேவைக்கு மக்கள் அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது.

    மறு பரிசீலனை செய்யுமா

    மறு பரிசீலனை செய்யுமா

    ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு இடையூறாகதான் பார்க்கப்படுகிறது. இதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Tamilnadu Government band Amazon and Flipkart like eCommerce companies activities while ful lockdown is implemented.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X