சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் அரசு ஊழியர்கள் சொந்த செலவில் பணிக்கு வர வேண்டும்.. தமிழக அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: திங்கள்கிழமை ( நாளை) முதல் அரசு ஊழியர்கள் சொந்த செலவில் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Recommended Video

    Govt Employees should come to work at their own expense

    தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம்காரணமாக மே 15ம் தேதி வரை 33 சதவீத பணியாளர்களுடன் தலைமை செயலகம் இயங்கியது.

    Tamil Nadu Government employees should come to work at their own expense from tomorrow

    அவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொண்டது.

    இந்நிலையில் நாளை (18ம் தேதி ) முதல் அனைத்து அரசு அலுவலங்களிலும் 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. எனவே அனைத்து அரசு ஊழியர்களும் இந்த பேருந்து வசதிகளை உரிய கட்டணம்செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Cyclone amphan: வங்கக் கடலில் இன்று தீவிரமாக மாறும் ஆம்பன் புயல்.. தமிழகத்திற்கு என்ன வார்னிங்! Cyclone amphan: வங்கக் கடலில் இன்று தீவிரமாக மாறும் ஆம்பன் புயல்.. தமிழகத்திற்கு என்ன வார்னிங்!

    முன்னதாக தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி தொடங்கி இன்று (மே 17) வரை ஊரடங்கை நீட்டித்து இருந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்தில் அரசு அலுவலக பணியாளர்கள், மருந்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பயணம் செய்து வந்தனர்.

    English summary
    Tamil Nadu Government told to govt employees, should come to work at their own expense from may 17th
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X