சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் மூன்றே மாதம்.. உங்கள் வீடு, அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு செய்தாகனும்.. தமிழக அரசு கெடு

Google Oneindia Tamil News

சென்னை: மழை நீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் நிறுவவேண்டும் என்று 3 மாதம் கெடு விதித்துள்ளது தமிழக அரசு.

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:

Tamil Nadu government has given 3 months deadline for establishing rain water harvesting system

வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேகரிப்பதற்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம். எனவே, இன்னும் 3 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதிலும் வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்.

3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவாவிட்டால், நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிடங்கள் தவிர சாலையோரங்களிலும் மழைநீரை சேகரிக்கும் அமைப்பை செயல்படுத்தும் பணியும் நடைபெறுகிறது.

அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

English summary
Tamil Nadu government has given 3 months deadline for establishing rain water harvesting system. If a rainwater harvesting system is not installed within 3 months, a notice will be sent and action will be taken. Apart from the buildings, there is roadside also a rainwater harvesting system will be install.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X