சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பலி.. கணக்கில் குளறுபடி... 10 மருத்துவமனைகளுக்கு அதிரடி நோட்டீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை மற்றும் மதுரையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஸ்தாபன சட்டத்தின் கீழ் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைகள் பிசிஆர் கருவிகள் கொண்டு சோதித்ததா, பரிசோதனை மேற்கொண்டதா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் மதுரையில் இருக்கும் மருந்துவமனைகளுக்கு மருத்துவ ஸ்தாபன சட்டத்தின் கீழ் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைகள் பிசிஆர் கருவிகள் கொண்டு சோதித்ததா, பரிசோதனை மேற்கொண்டதா போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

எனக்கு கொரோனா அறிகுறி.. கந்த சஷ்டி புத்தகத்தோடு தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.. நயினார் நாகேந்திரன் எனக்கு கொரோனா அறிகுறி.. கந்த சஷ்டி புத்தகத்தோடு தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.. நயினார் நாகேந்திரன்

ஜெ. ராதாகிருஷ்ணன்

ஜெ. ராதாகிருஷ்ணன்

வாராந்திர நல்லிணக்க பயிற்சி அடிப்படையில் மருத்துவமனைகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை வரை சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களில் 444 பேர் விடுபட்டுப் போனதாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, லேப், மருத்துவமனை, இடுகாடு, சுடுகாடு ஆகிய இடங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் தகவல்களை நல்லிணக்க குழு ஆய்வு செய்யும் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் தகவல்களை 24 மணி நேரத்தில் (இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை) அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

கொரோனா விதிமுறைகள்

கொரோனா விதிமுறைகள்

இதுகுறித்து மருத்துவ சேவை இயக்குநரகத்தின் எஸ். குருநாதன் கூறுகையில், ''சென்னையில் இருக்கும் மருத்துவமனைகள் உள்பட 10 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழப்பு மற்றும் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

அரும்பாக்கம்

அரும்பாக்கம்

அரும்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் 54 வயதுக்காரர் ஒருவர் ஜூலை 9ஆம் தேதி உயிரிழந்து இருப்பது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இது பின்னர் ஜூலை 29ஆம் தேதி தகவல்களை சேகரிக்கும்போது தெரிய வந்தது. அதே நாளில் ஓஎம்ஆர் மற்றும் நங்கநல்லூரில் இருக்கும் மருத்துவமனைகளில் 63 மற்றும் 89 வயதில் இருக்கும் இருவர் உயிரிழந்து இருப்பது தெரிய வந்ததுள்ளது.

பட்டியலில் சேர்ப்பு

பட்டியலில் சேர்ப்பு

கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் கொரோனாவுக்கு கூடுதலாக 256 பேர் உயிரிழந்து, கணக்கில் வராதது கண்டறியப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலையில் விடுபட்ட 186 பேரை இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டது. மொத்தம் 444 பேர் கூடுதலாக உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இதேபோல் மதுரையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனை நோயாளியின் பெயர், ஊர், தொடர்பு தகவல்கள், நோய் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மற்றொரு மருத்துவமனை நோய் எதிர்ப்பு சக்திக்கான பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்று நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

English summary
Tamil Nadu government has sent show cause notice to 10 hospitals on death reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X