தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே
Recommended Video
சென்னை: 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 தமிழக அரசின் விடுமுறை பட்டியலின் படி, குடியரசு தினம், ஆயுதபூஜை ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் , பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகின்றது. மேலும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது.
2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் முழு பட்டியலை பின்வரும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்-முழுப் பட்டியல்:
எண் | பண்டிகை | தேதி | கிழமை |
---|---|---|---|
1 | ஆங்கில புத்தாண்டு | 01.01.2020 | புதன் |
2 | பொங்கல் | 15.01.2020 | புதன் |
3 | திருவள்ளுவர் தினம் | 16.01.2020 | வியாழன் |
4 | உழவர் திருநாள் | 17.01.2020 | வெள்ளி |
5 | குடியரசு தினம் | 26.01.2020 | ஞாயிறு |
6 | தெலுங்கு வருடப்பிறப்பு | 25.03.2020 | புதன் |
7 | வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு | 01.04.2020 | புதன் |
8 | மகாவீர் ஜெயந்தி | 06.04.2020 | திங்கள் |
9 | புனித வெள்ளி | 10.04.2020 | வெள்ளி |
10 | தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் | 14.04.2020 | செவ்வாய் |
11 | மேதினம் | 01.05.2020 | வெள்ளி |
12 | ரம்ஜான் | 25.05-2020 | திங்கள் |
13 | பக்ரீத் | 01.08.2020 | திங்கள் |
14 | கிருஷ்ண ஜெயந்தி | 11.08.2020 | செவ்வாய் |
15 | சுதந்திர தினம் | 15.08.2020 | சனி |
16 | விநாயகர் சதுர்த்தி | 22.08.2020 | சனி |
17 | மொகரம் | 30.08.2020 | ஞாயிறு |
18 | காந்தி ஜெயந்தி | 02.10.2020 | வெள்ளி |
19 | ஆயுத பூஜை | 25.10.2020 | ஞாயிறு |
20 | விஜயதசமி | 26.10.2020 | திங்கள் |
21 | மிலாது நபி | 30.10.2020 | வெள்ளி |
22 | தீபாவளி | 14.11.2020 | சனி |
23 | கிறிஸ்துமஸ் | 25.12.2020 | வெள்ளி |