சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முக கவசம் இருந்தால் மட்டுமே வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு அனுமதி - தமிழக அரசு அரசாணை

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வழிபாட்டு தலங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே வழிபாட்டு தலங்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை மூடப்பட்டன. மசூதிகள், தேவாலயங்களிலும் கூட்டு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் சிறிய கோவில்கள், சர்ச்கள், தர்காக்களில் வழிபடுவதற்கு அரசு அனுமதி அளித்தது.

Tamil Nadu government issue general instructions for worship from Sep1

நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.இந்தநிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.

வழிபாடு தலங்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
வழிபாட்டின்போது பக்தர்கள் 6 அடி தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதை கோயில் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கோயில்களில் உள்ள சிலைகள், சிற்பங்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தொடரக் கூடாது தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும்.

இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. திடீரென அடுத்தடுத்து லாக்டவுன் தளர்வு.. இதுதான் காரணமோ? இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது.. திடீரென அடுத்தடுத்து லாக்டவுன் தளர்வு.. இதுதான் காரணமோ?

65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

Recommended Video

    Russia-ன் இரண்டாவது தடுப்பூசி.. முதல் சோதனை வெற்றி

    English summary
    The state government has issued Standard Operating Procedures for places of worship temples, mosques, churches, gurudwaras that are opened for public worship from September 1 in all over TamilNadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X