சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகார்.. ஹைகோர்டில் தமிழக அரசு பதில்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுனரிடம் பாமக அளித்த ஊழல் புகாரில் சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கத்தை பெற்று சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடில்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாமக தலைவர் ஜி.கே.மணி, 2015ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு மனுவில், அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா, ஒ.பன்னிர்செல்வம் ஆகியோரின் அமைசரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஆளுனராக இருந்த ரோசையாவிடம் ஊழல் புகார் அளித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம் புதிய உருமாறிய வைரஸ் வருமா? எய்ம்ஸ் இயக்குநர் பளிச்அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம் புதிய உருமாறிய வைரஸ் வருமா? எய்ம்ஸ் இயக்குநர் பளிச்

அந்த புகாரில் 2011ஆம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றது முதலே அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், முதல்வர், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் என பாகுபாடு இல்லாமல் ஊழல் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். .

 தாதுமணல் கொள்ளை

தாதுமணல் கொள்ளை

குறிப்பாக கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதல், ஆற்று மணல் அள்ளுவது, பாலில் கலப்படம், முட்டை கொள்முதல் கட்டிட கட்டுமான அனுமதி, பருப்பு கொள்முதல் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பாமக அளித்த ஊழல் புகார்

பாமக அளித்த ஊழல் புகார்

ஆளுனரிடம் 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 200 பக்கங்களை கொண்ட பட்டியலை பாமக வழங்கிய நிலையில், தொடர் நினைவூட்டல்கள் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுனரிடம் கொடுத்த புகாரை 2015ஆம் ஆண்டே தலைமை செயலாளருக்கு அவர் அனுப்பியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

அந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணராஜா ஆகியோர் ஆஜரானார்கள்.

உரிய நடவடிக்கை

உரிய நடவடிக்கை

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அளித்த விளக்கத்தில், பாமக புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவை வந்தவுடன், சட்டதிற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பாமக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தார்.

English summary
Tamil Nadu Government's reply in the High Court, Appropriate action will be taken as per the law after obtaining the explanation of the concerned departments over Corruption complaint lodged by pmk against former AIADMK ministers to the Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X