சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டிக்-டாக் செயலியை அரசு உறுதியாக தடை செய்யும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வித, விதமாய் வித்தியாசமாய் பல்வேறு காட்களில் இளைய தலைமுறையினர் நடித்து, அதனை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். அதில், கவர்ச்சியில் எல்லை மீறியும், ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசியும், மோதல்களை தூண்டுவதாகவும் உள்ளது.

இதற்கும் மேல் ஒரு படி தாண்டி போய், காவல்நிலையம், நீதிமன்றம் வரை சென்று கெத்தாக டிக் டாக் செய்தவர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்படி, டிக் டாக் செய்பவர்களின அட்ராசிட்டி அளவில்லாமல் போய்க் கொண்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது

சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

தடை செய்யப்படுமா?

தடை செய்யப்படுமா?

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு, பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன், கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

கண்காணிக்க தனி அதிகாரி

கண்காணிக்க தனி அதிகாரி

டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். அதேநேரத்தில், தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக் டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாகவும், அவரின் மூலமாகக் இந்த செயலி குறித்து இரண்டு முறை மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

தடை நீக்கம்

தடை நீக்கம்

டிக்-டாக் தொடர்பான வழக்கில் தடை விதித்த போதிலும், தமிழர்களுடைய கலாசாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என்று அந்நிறுவனம் பதிலளித்ததால், அந்த தடை நீதிமன்றம் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.

பதில் வரவில்லை

பதில் வரவில்லை

கடந்த ஏப்ரல் 22ம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை. செய்தித்தாள்களில் தொடர்ந்து பலர் இறந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தவறான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாக தான் செய்திகள் வருகின்றன. மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

English summary
Information Technology Minister Manikandan has stated that the government will soon ban on Tik Tok App in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X