சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000.. வாங்க ரெடியா மக்களே.. ஜன. 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வினியோகம்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கூடிய பணிகள் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

Tamil Nadu government will start Pongal gift distribution work from January 9

இந்தப் பரிசு தொகுப்பு என்பது பொங்கல் பொங்க தேவைப்படக்கூடிய மூலப்பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பாகும். இது தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாட செலவாகும் என்பதால் இந்த ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.

அரையாண்டு லீவு 1 நாள் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. எப்போ பள்ளிகள் திறக்கப்படும் தெரியுமா?அரையாண்டு லீவு 1 நாள் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. எப்போ பள்ளிகள் திறக்கப்படும் தெரியுமா?

இது தொடர்பான நடைமுறைகள் பற்றி தமிழக அரசு இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதைப் பாருங்கள்:

ஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கூடிய பணிகள் நிறைவடைய வேண்டும். ஒருவேளை, பொங்கல் பரிசு, கிடைக்கப்பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1000 ரொக்கத் தொகையும், ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள், அந்த ரேஷன் கடைகளில் தங்களுக்குரிய பொங்கல் பரிசுத் தொகையை, பெறலாம்.

ரூ.1000 மற்றும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இந்த தொகுப்பில் இருக்கும்.

English summary
Tamil Nadu government will start its Pongal gift box distribution work from January 9 to January 12 and rupees thousand will be given to the ration card holders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X