சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர் பிளான்.. 24, 25 தேதிகளில் வீடு தேடி ரேஷன் டோக்கன் வருகிறது மக்களே.. தமிழக அரசுக்கு சபாஷ்!

ரேஷன் பொருட்களை வாங்க டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும், ரேசன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் சூப்பர் அறிவிப்பு ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    தாங்க முடியல | சென்னை மக்களின் கொரோனா குமுறல் | Oneindia Tamil

    கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.. இதனால் பெரும்பாலானோர் வேலைககளை இழந்துள்ளனர்.. ஏழை மக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அரசு அறிவித்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களை ஈர்த்து வருகிறது.. ஒரு பக்கம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வந்தாலும் மற்றொரு மக்கம் தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் அரசு மிக மிக தீவிரமாக இறங்கி உள்ளது.

    முதலமைச்சர்

    முதலமைச்சர்

    ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்... இது சம்பந்தமாக தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    டோக்கன்

    டோக்கன்

    அதன்படி, வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என்றும் , அந்த டோக்கன்களின் அடிப்படையில் மக்கள் ரேஷன் கடையில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

    அட்டைதாரர்கள்

    அட்டைதாரர்கள்

    "அதில், நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும்.சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்தக் டோக்கன்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும் அதன்படி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் உரிய நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    செய்திக்குறிப்பு

    செய்திக்குறிப்பு

    இந்த நடைமுறையை பொதுமக்கள்.முறையாக கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனை வீடுகளுக்கே வந்து தரும் இந்த அறிவிப்பினால் மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

    English summary
    Tamil Nadu govt will door delivery ration Goods this month to ease the people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X