தமிழண்டா..! அதிக கோவில்கள் கொண்ட பட்டியலில் தமிழகம் முதலிடம்! மற்ற மாநிலங்களில் எவ்வளவு தெரியுமா?
சென்னை : சுமார் 7,9000 என்ற எண்ணிக்கையில் இந்தியாவிலேயே அதிக கோயில்கள் உள்ளது தமிழகத்தில் தான் என்பதும், அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இருப்பது ஐஐடி மும்பை நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் மிகவும் செழுமையான இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழகம் திகழ்கிறது. மிழர்கள் தங்களின் வேரூன்றிய தமிழ் கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்
சுமார் 2000 ஆண்டுகால வரலாற்று பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் பிறந்த மக்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும், அவர்களின் கலாச்சாரம் அவர்களின் அடையாளம் மற்றும் மரபுகளை வலுவாக பின்பற்றுவது அவர்களின் வரலாற்றை மேலும் வலுப்படுத்துகிறது.
நானும் திமுககாரன் தான்! ரொம்ப பேசாதீங்க! எகிறிய ஒப்பந்ததாரர்! எம்எல்ஏ முன்னிலையில் நடந்த பஞ்சாயத்து!

தமிழர்களின் வரலாறு
தமிழர்களின் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடம் வகிப்பது தமிழகத்தில் உள்ள கோவில்கள் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டி எழுப்பப்பட்ட வழிபாடு மட்டுமல்லாது வரலாற்றின் பக்கங்களை திரும்பிப் பார்க்கும் ஒரு அற்புத புத்தகமாகவும் கோயில்கள் திகழ்கின்றன. மன்னர்களின் ஆட்சி நிர்வாகம் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கு கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மிக முக்கிய சாட்சியமாக விளங்குகின்றன.

கோவில்கள் எண்ணிக்கை
அந்த அளவுக்கு தமிழர்களை பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தவை கோவில்கள். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன இவற்றில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது என பழைய தகவல்கள் கூறியுள்ளன. ஆனால் தற்போது வந்துள்ள தகவல்களின் படி சுமார் 79 ஆயிரம் கோவில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முதலிடம்
இந்தியாவில் தற்போது உள்ள கோயில்களின் எண்ணிக்கை மற்றும் பாரம்பரியம் ஆகிய தகவல்களை சேகரிப்பதற்காக, மும்பை ஐஐடி மாணவர்கள் கள ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர்.. அந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டும் 79,154 கோவில்கள் உள்ளதாகவும், தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்கள் என்ற எண்ணிக்கை உள்ளதும் தெரியவந்துள்ளது.

சுற்றுலா வாய்ப்பு
தமிழகத்திற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 77,283 கோயில்களும், கர்நாடகாவில் 61,232 கோயில்களும், மேற்கு வங்கத்தில் 53,658 கோயில்களும், குஜராத்தில் 49,995 கோயில்களும் உள்ளதாகவும் மகாராஷ்டிராவில் 1 லட்சம் பேருக்கு 62 கோயில்களும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் கோயில்களை மையப்படுத்தி சுற்றுலா தளங்களை ஈர்க்க வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.