சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை காலி செய்த கொங்கு மாவட்டங்கள்.. எப்படி நடந்தது சூப்பர் மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் கொங்கு மண்டல மாவட்டஙகளில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டங்களாக மாறி உள்ளன.

தமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த மாவட்டங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் கிடுகிடுவென பாதிப்புகள் உயர்ந்தன. கோவையிலும், திருப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக விரைவாக 100ஐ கடந்தன.

இப்படி கிடுகிடுவென தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், பாதிப்பை தடுக்கும் பணிகளில் தீவிரமாக நடந்தது. இதற்கு நல்ல பலன் இப்போது கிடைத்துள்ளது.

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா.. ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு.. செம்ம மாற்றம்.. முழு விவரம்தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா.. ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு.. செம்ம மாற்றம்.. முழு விவரம்

சாதித்த ஈரோடு

சாதித்த ஈரோடு

கொரோனா தொற்றால் தமிழகத்தில் ஆரம்பத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்த ஈரோடு தான் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட முதல் மாவட்டமாக மாறியது. ஈரோட்டில் 70 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 69 பேர் குணம் அடைந்தனர். ஒருவர் மட்டும் உயிரிழந்தார். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டது ஈரோடு. ஆனால் மற்ற மாவட்டங்களை போல் ஈரோட்டில் கொரோனா அதன்பிறகு பாதிக்கவில்லை.குறிப்பாக கோயம்பேடு மூலம் ஈரோடு எந்த வகையிலும் பாதிக்கவில்லை. கொரோனா பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தி வீடு வீடாக சோதனை படுத்தியதால் தொற்று பாதிப்பு விரைவாக தடுக்கப்பட்டது. சுமார் ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறி உள்ளது. பச்சை மண்டலமாக உள்ளது.

எப்படி வென்றது திருப்பூர்

எப்படி வென்றது திருப்பூர்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இன்னொரு முக்கியமான கொங்கு மாவட்டம் திருப்பூர். உண்மையில் திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதை மிகப்பெரிய சாதனையாக பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு குட்டி இந்தியாவையே உள்ளடக்கிய ஊர் திருப்பூர். பல்வேறு மாவட்ட மக்கள், பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த மாவட்டத்தில் தான் முதல்முறையாக அத்தியாவசிய பொருட்களுக்கு டோர் டெலிவரி சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் சமூக விலகலும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் கொடை கொண்டுவந்தால் தான் மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் இங்குதான். இப்படி சமூக விலகல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டதாலும், சோதனைகளை அதிகப்படுத்தியதாலும் 114 பேருக்கு மேல் புதிதாக யாருக்கும் இன்று வரை தொற்று பாதிக்கவில்லை. அத்துடன 114 பேரில் 114 பேரையும் குணப்படுத்தி அசத்தியது திருப்பூர். இங்கு யாரும் உயிரிழக்கவில்லை. கோயம்பேடு சந்தை தொற்று திருப்பூரை பாதிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம் ஆகும்.

கடும் சிரமத்தில் சாதித்து

கடும் சிரமத்தில் சாதித்து

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கோவை மாவட்டம் கொரோனாவை வெல்ல கடும் போராட்டத்தை சந்தித்தது. ஆரம்பத்தில் திடீரென குறிப்பிட்ட பகுதியில் அதிகரித்த கொரோனா, அதன்பின்னர் திடீரென மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு பரவியது. ஆனாலும் விரைவாக அனைவரையும் கண்டுபிடித்து சோதித்து தனிமைப்படுத்தியது கோவை மாவட்ட நிர்வாகம். இதனால் படிப்படியாக தொற்று பாதிப்பு சரிந்தது. ஒருகட்டத்தில் புதிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வந்தது. இறுதியில் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 114 பேர் குணம் அடைந்தனர். இரண்டு பேர் இறந்தனர் ,இதில் ஒருவர் இறந்த பின்னர் கொரோனா இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது. தற்போது கோவையில் கொரோனா பாதிப்புடன் யாரும் இல்லை. இதனால் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டமாக கோவை உருவெடுத்துள்ளது.

மீண்டது சேலம்

மீண்டது சேலம்

சென்னை, பெங்களூருவை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான சேலத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பம் முதலே கட்டுக்குள் இருந்தது. படிப்படியாக அதிகரித்த போதும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. விரைவாக பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இது ஒருபுறம் எனில் மொத்தம் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பபட்ட நிலையில் 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது மருத்துவமனையில் உள்ள 5 பேரும் குணம் அடைந்துவிட்டனர். நாளை அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் உருவாகிறது. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுமே கோயம்பேடு தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
How Coimbatore, Tirupur, Erode and Salem flattened the Covid-19 curve . this four now become a Covid-19 free districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X