சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை கிடு கிடு உயர்வு.. வாட் வரி அதிகரிப்பால் இது தான் நாளை விலை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி வருவாய் வரும் அனைத்து துறைகளும் தமிழகத்தில் முடங்கி உள்ளது.

Tamil Nadu : increase the petrol price by 3.25 per liter & Diesel by 2.50 per liter.3

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதிகளும் இதுவரை தமிழகத்திற்கு பெரிய அளவில் விடுவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்நிலையில் நிதி வருவாயை பெருக்குவதற்காக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளதாக தெரிகிறது.. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.72.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 65.71 ஆகவும் தற்போது விற்கப்படுகிறது. நாளை முதல் பெட்ரோல் விலையில் 3.25 ரூபாய் உயர்த்தப்படுவதால் 75.53 காசுகளாகவும். டீசல் விலை லிட்டருக்கு 2.50 உயர்த்தப்படுவதால் ரூ.68.21 ஆக விற்கப்படும் என தெரிகிறது. விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதே சந்தையில் பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் அதற்கு தகுந்தாற் போல் விலை குறைப்பு செய்யப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக நிதி வருவாயை அதிகரிக்க வேண்டி பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி அதிகரிக்கப்பட்டு மேலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu government increased VAT tax for fuels. This will increase the petrol price by 3.25 per litre & Diesel by 2.50 per litre.3
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X