சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா? டிஸ்சார்ஜ் மிக அதிகம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 68,179 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. இதில் 5994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிட விட மிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6020 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 238638 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்

68 ஆயிரம் பேருக்கு

68 ஆயிரம் பேருக்கு

தமிழகத்தில் இன்று மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 68,179 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 31,09,708 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளால் இன்று மட்டும் 5994 பேரும், இதுவரையில் 2,96,901 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

32 லட்சம் பரிசோதனைகள்

32 லட்சம் பரிசோதனைகள்

தமிழகத்தில் இன்று மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 70,186 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 32,25,805 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

தேனியில் அதிகரிப்பு

தேனியில் அதிகரிப்பு

எனினும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் 53,336 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் தான் மிக அதிகபட்சமாக சென்னையில் 11,654 பேரும், திருவள்ளூரில் 3513 பேரும், தேனியில் 3014 பேரும், செங்கல்பட்டில் 2728 பேரும், காஞ்சிபுரத்தில் 2718 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று சென்னையில் 1061 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் 463 பேரும், செங்கல்பட்டில் 356 பேரும், விருதுநகரில் 338 பேரும், திண்டுக்கல்லில் 327 பேரும், கன்னியாகுமரியில் 268 பேரும், திருவள்ளூரில் 285 பேரும், தூத்துக்குடியில் 237 பேரும், திருநெல்வேரிலயில் 255 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
In Tamil Nadu today, a maximum of 68,179 people were tested by RT-PCR today . A total of 31,09,708 people have been tested so far. 70,186 samples tested by RT-PCR today. till date 32,25,805 samples tested by RT-PCR
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X