சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னைக்கு வேணும்னா...பாஜக, காங். இலவசங்களை அறிவிக்கலாம்.. ஆனால் அதுக்கு விதை நாம போட்டது!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைக்கு வேண்டுமானால் பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், என எந்த கட்சி வேண்டுமானாலும் இலவச திட்டங்களையும் மக்கள் நல திட்டங்களையும் அறிவிக்கலாம். ஆனால் அதற்கு எல்லாம் முதல் விதை நம்முடைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போட்டது.

இந்தியாவிலேயே மக்கள் நல திட்டங்களை வழங்குவதில் முன்னோடி மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். கல்விக்கு கண் திறந்த காமராஜர் காலத்திலேயே மக்களுக்கான நல திட்டங்கள் ஆரம்பம் ஆகிவிட்டன.

இந்தியாவில் முதல்முதலாக அதுவும் தமிழகத்தின் மாணவர்களை பள்ளிக்கூடம் செல்ல வைப்பதற்காக காமராஜரால் தொடங்கப்பட்ட உன்னதமான திட்டம் தான் மதிய உணவு திட்டம். இந்த திட்டத்தை இன்றைக்கு ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் உள்ளது.

வேட்டியை மடிச்சு கட்டிட்டு பொள்ளாச்சிக்கு வந்திருக்க வேண்டாமா.. கரு . பழனியப்பன் பாய்ச்சல் வேட்டியை மடிச்சு கட்டிட்டு பொள்ளாச்சிக்கு வந்திருக்க வேண்டாமா.. கரு . பழனியப்பன் பாய்ச்சல்

3படி லட்சியம்

3படி லட்சியம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னர் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில், வறுமையில் இருந்த தமிழக மக்களுக்கு 1967ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்ற முழகத்தோடு திமுக ஆட்சியை பிடித்தது.

அங்கன்வாடிகள்

அங்கன்வாடிகள்

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னர் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில், வறுமையில் இருந்த தமிழக மக்களுக்கு 1967ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்ற முழகத்தோடு திமுக ஆட்சியை பிடித்தது.

இலவச சீருடை

இலவச சீருடை

மாணவர்களுக்கு இலவச சீருடையும் தமிழகத்தில் வழங்கப்பட்டது. இதேபோல் மதிய உணவுடன், சீருடை செருப்பு, புத்தகம், நோட்டுகள் என பல பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இத்துடன் இலவசக்கல்வியும் வழங்கப்பட்டன. அப்படி படித்து வந்ததால் தான் இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய கல்வி புரட்சி நடந்துள்ளது.

கலைஞர் டிவி

கலைஞர் டிவி

பெரிய அளவில் இலவசங்கள் என்பது 2006ம் ஆண்டு வரை இருக்காது. அதுவரை மக்கள் நல திட்டங்களுக்கு தான் அரசு பணம் ஒதுக்கி செலவு செய்து வந்தன. 2006ம் ஆண்டு தேர்தலில் தொழில்நுட்பங்களும், தொலைக்காட்சிகளும் வளர்ந்த அந்த சமயத்தில் அனைத்து வீடுகளுக்கும் கலைஞர் டிவி வழங்கப்பட்டன. இந்த திட்டதை அறிவித்து செயல்படுத்தியது கருணாநிதி. இதேபோல் கூட்டுறவு வங்கியில் பயிர்கடனையும் அந்த சமயத்தில் ரத்து செய்து முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார்.

சைக்கிள்

சைக்கிள்

2011ம் ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதன் படி 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப் டாப், சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதேபோல் இலவச மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் மற்றும் பேன்களும் வழங்கப்பட்டன.

இலவச அரசி

இலவச அரசி

இதேபோல் 2011ம் ஆணடு ஏழைகளுக்கு அரிசி முற்றிலும் இலவசம் என ஜெயலலிதா அறிவித்தார். இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்ப்டடது. இதேபோல் குறைந்த விலையில் சாப்பாடு போடும் அம்மா உணவகம் திட்டத்தையும் ஜெயலலிதா வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

மின்சாரம் இலவசம்

மின்சாரம் இலவசம்

முதியோர் உதவித்தொகை 1500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என ஜெயலலிதா இலவச மின்சார திட்டத்தை 2016ம் ஆண்டு அறிவித்தார். இந்த திட்டமும் இப்போது நடைமுறையில் உள்ளது.

திருமண உதவி திட்டம்

திருமண உதவி திட்டம்

திருமணம் செய்யும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 வரை ரூபாய் பணம் என தமிழக அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளுக்காக 18 ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கவர்ச்சி திட்டங்கள்

கவர்ச்சி திட்டங்கள்

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், பட்டப்படிப்பு வரை இலவச கல்வி திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் என பல திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தை பின்பற்றியே அத்தனை மாநிலங்களும் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இன்றைக்கு மக்கள் நல திட்டங்கள் அத்தனைக்கும் விதை போட்டது தமிழகம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

English summary
congress. bjp and any other party have released free scheme for election polls, but first announced by tamilnadu parties. so tamil nadu is top state for people welfare scheme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X