சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்றே சொன்னோம்... திமுகவுக்கு ஷாக்- ரஜினிகாந்தை சந்தித்தனர் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் இன்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தனர்.

Recommended Video

    சி.ஏ.ஏவால் மிகப்பெரிய பாதிப்பு: ரஜினியுடன் ஜமா அத் உலமா சபை பேச்சுவார்த்தை!

    திமுக வியூகத்துக்கு வேட்டு... முஸ்லிம் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த்! என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமையன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Tamil Nadu Jamathul Ulama Sabai delegation meet Rajinikanth

    சி.ஏ.ஏ. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

    Tamil Nadu Jamathul Ulama Sabai delegation meet Rajinikanth

    தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிட இருக்கும் ரஜினிகாந்துக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும் என ஆலோசனை கூறப்பட்டது. இதனடிப்படையில் ரஜினிகாந்துடன் ஜமாஅத் உலமா சபை நிர்வாகி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதனையடுத்து ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகளை சந்திக்க ரஜினிகாந்த் நேர ஒதுக்கியிருக்கிறார் என நாம்தான் முதன் முதலில் செய்தி வெளியிட்டோம்.

    Tamil Nadu Jamathul Ulama Sabai delegation meet Rajinikanth

    மேலும் சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக அள்ளிவிடலாம் என்கிற கனவில் இருக்கும் திமுகவுக்கு மிகப் பெரும் பின்னடைவை இச்சந்திப்பு ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த நிலையில் ஜமாஅத் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

    என்ன சொன்னார் ரஜினிகாந்த்?

    ஜமாஅத் உலமா சபையின் காஜா முயீனுத்தீன் பாகவி, அன்வர் பாதுஷாஹ், முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிஏஏவை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து ரஜினிகாந்திடம் விளக்கினோம். அவரும்புரிந்துகொண்டார். நாட்டில் அமைதியை உருவாக்க என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார் ரஜினிகாந்த் என்றனர்.

    English summary
    A delegation of Tamil Nadu Jamathul Ulama Sabai met Actor Rajinikanth at his residence in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X