சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பக்தர்களுக்கு குட் நியூஸ்... தினசரியும் சாமி தரிசனம் செய்யலாம் - தடையை நீக்கிய தமிழக அரசு

தமிழகத்தில் தினசரியும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அதனை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு 25 ஆயிரம் பேரை கடந்து பதிவாகி வருகிறது. ஓமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர லாக்டவும், ஞாயிறுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிரசார பேரணி செல்ல அதிரடி தடை.. வேறு என்ன கட்டுப்பாடுகள்?.. முழு விவரம்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிரசார பேரணி செல்ல அதிரடி தடை.. வேறு என்ன கட்டுப்பாடுகள்?.. முழு விவரம்

மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

லாக்டவுன் ரத்து

லாக்டவுன் ரத்து

தமிழகம் முழுவதும் ஜனவரி 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வார இறுதி நாள் ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அனுமதி வழங்கியது.

வழிபாட்டு தலங்கள் திறப்பு

வழிபாட்டு தலங்கள் திறப்பு

இந்நிலையில் தினசரியும் வழிபாட்டு தலங்களை திறக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரியும் வழிபாட்டுத்தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தினசரியும் சாமி தரிசனம்

தினசரியும் சாமி தரிசனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 28 வெள்ளிக்கிழமை முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்றும் நாளை மற்றும் வரும் சனி, ஞாயிறு அன்று வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மகிழ்ச்சி

பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் தற்போது திங்கட்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழிபாட்டுத்தலங்கள் திறந்திருக்கின்றன. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். நான்கு நாட்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தினசரியும் சாமி தரிசனம் செய்யலாம் எனவும் அனைத்து நாட்களும் வழிபாட்டுத்தலங்களையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
Tamil Nadu lock down relaxation:( தினசரியும் சாமி தரிசனம் செய்ய அனுமதி) The Government of Tamil Nadu has given permission to open places of worship in Tamil Nadu on all days. The Tamil Nadu government has lifted the ban on places of worship on Fridays, Saturdays and Sundays only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X