சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஜூன் 28 முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கலாம்... பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Tamil Nadu lockdown relaxation CM Stalin to take decision today

கடந்த முறை மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடைபெற்றது.

புதுச்சேரி, கேரளாவில் வழிபாட்டிற்காக ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வழிபாட்டுத்தலங்களை தரிசனத்திற்காக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்தும் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் மருத்துவ துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி கிடையாது

அனைத்து நகை கடைகளும் குளிர்சாதன வசதியின்றி 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நகை கடைகள் செயல்படலாம். அதே போல குளிர்சாதன வசதியின்றி அனைத்து துணி கடைகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து துணி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைக்கு அனுமதி

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று குறைந்து வரும் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. வகை 2மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே செல்ல இபாஸ்/இபதிவு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர் ,புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிபேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் சீரியல்கள் படப்பிடிப்புக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின் வணிக நிறுவனங்கள் இரவு 9 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?

இனிப்பு, கார வகை கடைகள் காலை 6 முதல் 9 மணி வரை செயல்படலாம். செல்போன், கணிணி கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம் எனவும் சாலையோர உணவு கடைகள் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister MK Stalin on Friday said that decision to relaxation lockdown in the state will be taken after consulting with a committee of experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X