சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்.. மக்களுக்கு தமிழக அரசு மிக மிக முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரேனோ நிலைமை தீவிரமாகும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தமிழக சுகாதரத்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 12 பேருக்கு இருப்பது உறுதி செயயப்பட்டுள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இவர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர் அல்ல. எனினும் கொரோனா இவரக்கு பாதித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

tamil nadu peoples do not come out of home: tn govt important request

இந்நிலையில் தமிழக சுகாதார துறை அமைச்சகம் மக்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள்களுடன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிப்பதால் தமிழகத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். ஈரோட்டில் ஏற்கனவே இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் அருகாமையில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மட்டுமல்லாமல் அருகாமை மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

சேலத்தில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் 21 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே சேலம் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் பரவுகிறது. எனவே யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மிகமிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரலாம். மற்றபடி வரவே வேண்டாம்.

தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரேனோ நிலைமை தீவிரமாகும். மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மக்ககள் நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
tn govt important request to people. dont come out of home:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X