சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பால் பாக்கெட்டும்...எஸ்வி சேகரும்...காக்க வைத்து...பழி தீர்த்த அதிமுக!!

Google Oneindia Tamil News

சென்னை: ''தான் வாங்கிய 9 ஆவின் பால் பாக்கெட் கெட்டுப் போய்விட்டது'' என்று எஸ்வி சேகர் தனது ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார். இதையடுத்து இவரது வீட்டுக்கு ஆவின் நிர்வாகம் புதிய பால் பாக்கெட்டுகளை வழங்கிச் சென்றது. இந்த தகவலை ட்விட்டரில் எஸ்வி சேகர் வெளியிட்டு இருந்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

''நான் பதிவு பண்ணிய மூன்று மணி நேரத்துக்குள் 9 புதிய toned பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகத்திலிருந்து ஒரு அதிகாரி வீட்டிற்கு வந்து மாற்றிக் கொடுத்துச் சென்றார். தங்களுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்'' என்று முதல்வருக்கு நன்றி தெரிவித்து எஸ்வி சேகர் பதிவிட்டு இருந்தார்.

எஸ்வி சேகர் எந்த கட்சி? வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்தானே.. விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமிஎஸ்வி சேகர் எந்த கட்சி? வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்தானே.. விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

வருத்தம்

வருத்தம்

இதற்கு அப்போது பெரிய அளவில் சர்ச்சை எழுந்தது. கொரோனா காலத்தில் பலரும் உணவில்லாமல் பட்டினியாக இருந்து வருகின்றனர். ஆனால், எஸ்வி சேகர் பதிவிட்டவுடன் அவரது வீட்டுக்கு புதிய பால் பாக்கெட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ''நமக்கு அது மாதிரி முதல்வர் கொடுப்பாரா?'' ''இது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது'' என்று பதிவிட்டு, முதல்வரை விமர்சித்து இருந்தனர்.

சந்தர்ப்பம்

சந்தர்ப்பம்

இதுபோன்று ட்விட்டரில் பதிவு செய்து முதல்வருக்கு மட்டுமின்றி அதிமுக ஆட்சிக்கே எஸ்வி சேகர் அசிங்கத்தை ஏற்படுத்தி இருந்தார். முதல்வர் அந்த உத்தரவை பிறப்பிக்காமல் இருந்து இருக்கலாம், ஆவின் அதிகாரிகள் பார்த்து அவருக்கு புதிய பால் பாக்கெட்டுகளை கொடுத்து இருக்கலாம். ஆனால், அந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடாமல், எஸ்வி சேகர் தனக்கு சாதகமாக மாற்றி, முதல்வரை அசிங்கப்படுத்தினார்.

அதிமுக கொடி

அதிமுக கொடி

இந்த நிலையில் மீண்டும் சிக்கமாட்டாரா என்று காத்துக் கொண்டிருந்த அதிமுகவுக்கு வசமாக சிக்கினார் எஸ்வி சேகர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ''அதிமுக உருப்பட வேண்டுமானால், கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்'' என்று எஸ்வி சேகர் கூறியிருந்தார்.

மான ரோஷம்

மான ரோஷம்

இதற்கு நேற்று பதில் அளித்து இருந்த அமைச்சர் ஜெயக்குமார், ''எஸ்வி சேகர் உண்மையில் மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அம்மா இவரை அடையாளம் காட்டினர். மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அம்மாவால், அதிமுக கொடியை, அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், ஐந்து வருட சம்பளத்தை அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்கணும். தற்போது எம்.எல்.ஏ. க்களுக்கான பென்சன் வாங்குகிறார். அதையும் இவர் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இவை இரண்டுக்கும் அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஆதாரம் இல்லாமல் தமிழநாட்டு மக்களிடம் அவர் பேசும் பேச்சுக்கள் மக்களிடம் எடுபடாது'' என்று பதிலடி கொடுத்து இருந்தார்.

ஓடி ஒளிவார்

ஓடி ஒளிவார்

இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. கொஞ்சமும் யோசிக்காமல், ''எஸ்வி சேகர் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. ஏதாவது பேசிவிட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்'' என்று பதிலடி கொடுத்தார்.

முதல்வருக்கு பாராட்டு

முதல்வருக்கு பாராட்டு

எஸ்வி சேகருக்கு நச்சென்று பதில் அளித்து இருப்பதற்கு சமூக வலைதளங்களில் முதல்வருக்கு வாழ்த்தும், பாராட்டும் குவிந்து வருகிறது. தொடர்ந்து எஸ்வி சேகர் ஏதாவது ஒரு வகையில் ஆட்சியை குறை கூறி வந்த நிலையில், அவருக்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று அதிமுக தற்போது முடிவு எடுத்துள்ளது.

பாஜகவின் நிலைப்பாடு

பாஜகவின் நிலைப்பாடு

தமிழகத்தில் பாஜகவை பொறுத்த வரையில் எஸ்வி சேகர் ஒன்றும் முடிவு எடுக்கும் ஸ்தானத்தில் இல்லை. பாஜகவே அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காமல்தான் ஒதுக்கி வைத்துள்ளது. ஆதலால், எஸ்வி சேகரின் நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடு என்று எடுத்துக் கொள்ளவும் முடியாது.

English summary
Tamil Nadu Politics: CM Edappadi Palaniswamy and minister Jayakumar retaliation SV Sekar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X