சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    'But Pakistan Is Pakistan': India Hits Out Over Stopping Of Postal Mails

    சென்னை: தமிழகத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் 30 பார்சல்கள் பாகிஸ்தானுக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் பெரும்பாலும் முக்கியமான ஆவணங்கள் மற்றும் விளைபயிர்களின் விதைகள் தான் அதிகம் போயிருக்கின்றன.

    இது தொடர்பாக தபால் அலுவலக வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ஆவணங்கள் பாகிஸ்தானுக்கு செல்லும்.

    இந்த தபால்களில் ஸ்பீட் போஸ்டில் செல்பவை மும்பை வழியாகவும், சாதாரண தபால்கள் டெல்லி வழியாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும். டெல்லி அல்லது மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும் தபால்கள் அங்கிருந்து சாலை மற்றும் விமான மார்க்கமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படும்.

    தபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம் தபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்

    விதைகள் இருக்கும்

    விதைகள் இருக்கும்

    இந்த தபால்களில் பெரும்பாலும் முருங்கை விதை உள்பட பயிர்களின் விதைகள் அதிகமாக இருக்கும். அவற்றை தனியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் இருந்து பெரும்பாலான தபால்கள் ஸ்பீட் போஸ்ட்களில்தான் பாகிஸ்தானுக்கு செல்லும். பதிவு தபாலில் மாதத்திற்கு ஐந்து என்ற அளவில் செல்லும்.

    அஞ்சல் சேவை

    அஞ்சல் சேவை

    தபால் சேவைகளை இண்டர்நெட் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும் ஒரிஜினல் மற்றும் முக்கிய ஆவணங்கள் பதிவு தபாலில் தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அஞ்சல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறுகிறது .

    இனிப்புகள்

    இனிப்புகள்

    வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடரும் குழந்தைகளுக்கு ஆவணங்களை அனுப்ப பெற்றோர்கள் எங்களது அஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். இது தவிர, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது இந்தியா போஸ்ட் மூலம் இனிப்புகள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.

    பாகிஸ்தான் தபால்

    பாகிஸ்தான் தபால்

    இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கு அஞ்சல் போக்குவரத்து மிகக் குறைவு. பதிவு செய்யப்பட்ட தபால் மற்றும் ஸ்பீடு போஸ்ட் தவிர, ஏரோகிராம் மற்றும் சீலிடப்பட்ட தபால்கள் மூலமாகவும் தொடர்பு இருந்தது. இவற்றில் எந்த எண்ணிக்கையும் தபால் துறையிடம் இல்லை. மறுபுறம், பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கான தபால்கள் டெல்லி வழியாக அனுப்பப்படுவதால் அவை உள்நாட்டு சேவைகளாக கருதப்படுகின்றன. எனவே, பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அஞ்சல்களின் எண்ணிக்கை எங்களிடம் இல்லை" என்றார்.

    பாகிஸ்தான் ஏற்கவில்லை

    பாகிஸ்தான் ஏற்கவில்லை

    இதனிடையே தபால் சேவையை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்று மத்திய அரசு கண்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 க்குப் பிறகு இந்தியாவில் இருந்து எந்த தபால் போக்குவரத்தையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சேவைகள் நிறுத்தம்

    சேவைகள் நிறுத்தம்

    பாகிஸ்தான் தபால் சேவைகளை நிறுத்திய விவகாரம் வெளியே வந்த நிலையில் , அந்த நாட்டுக்கு எந்த தபாலையும் பதிவு செய்ய வேண்டாம் என்று தபால் நிலையங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. "தமிழ்நாட்டில் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தும் எந்தவொரு தபால்களும் இப்போது பாகிஸ்தானுக்கு பதிவு செய்யப்படவில்லை" என்று தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    English summary
    Tamil Nadu Post offices booked nearly 30 items a month to Pakistan till the western neighbour stopped mail services with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X