சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் முழுக்க தீயாய் பரவும் கொரோனா.. சென்னைக்கு அடுத்து எந்த மாவட்டங்களில் அதிகம்? முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மிக மோசமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவலில் இதுபற்றிய அம்சங்கள் உள்ளன. இதன்படி, சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னையை ஒப்பிட்டால் இந்த மாவட்டங்களில் சுகாதார வசதி கிடையாது. ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது உச்சம்: தமிழகத்தில் ஒரே நாளில் 5849 பேருக்கு கொரோனா.. சென்னையைவிட பிற பகுதியில் 6 மடங்கு அதிகம்புது உச்சம்: தமிழகத்தில் ஒரே நாளில் 5849 பேருக்கு கொரோனா.. சென்னையைவிட பிற பகுதியில் 6 மடங்கு அதிகம்

திருவள்ளூர் நிலவரம்

திருவள்ளூர் நிலவரம்

சென்னையில், 1171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக பாதிப்பு பதிவாகியுள்ள மாவட்டம், திருவள்ளூர். அங்கு 430 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதல் முறையாக 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 223 பேர், கோவை 178, திண்டுக்கல் 99, கள்ளக்குறிச்சி 86, காஞ்சிபுரம் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி 152, மதுரை 197, புதுக்கோட்டை 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி

திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி

விருதுநகர் - 363, தூத்துக்குடி - 327, திருச்சி - 213, திருவண்ணாமலை - 210, தேனி -165, வேலூர் - 137, நெல்லை-120, தஞ்சை-106 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம், சேலம், திருப்பூர்

விழுப்புரம், சேலம், திருப்பூர்

விழுப்புரம் -105, சேலம்-99, ராமநாதபுரம்-88, கள்ளக்குறிச்சி-86, தென்காசி-85, கடலூர்-78, சிவகங்கை-70, கிருஷ்ணகிரி-69, திருப்பத்தூர்-60, புதுக்கோட்டை-59, திருவாரூர்-45, நாமக்கல் -41, திருப்பூர்-29, அரியலூர்-26, பெரம்பலூர் - 15, நாகை-14, நீலகிரி -12, தர்மபுரி - 7, ஈரோடு -6 , கரூர்-4 என்ற அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

மருத்துவ வசதி

மருத்துவ வசதி

அரசு உடனடியாக பிற மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை அதிகரிப்பது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது போன்றவைதான், இந்த பிரச்சினைக்கு தீர்வாக மாறும். ஏனெனில் அங்கெல்லாம் மருத்துவ கட்டமைப்பு சென்னையை ஒப்பிட்டால் நூற்றில் ஒரு மடங்குதான் உள்ளது. எனவே, தற்காலிக மருத்துவ வசதிகளாவது இம்மாவட்டங்களுக்கு தேவையாகும்.

English summary
A further 5,849 people in Tamil Nadu have been diagnosed with corona infection. Thus, for the first time the number of corona has exceeded 5,000. The total number of victims has risen to 1,86,492.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X