சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Unlock 4.0 in Tamil Nadu: ஓட்டல்கள்...பூங்காக்கள்...திருமணம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் 4.0 லாக்டவுன் தளர்வுகள் என்ற பெயரில் நேற்று சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் முக்கியமாக பொது போக்குவரத்து மாவட்டங்களுக்குள் இயக்கப்படும், இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டல், பூங்காக்களில் நெறிமுறைகளுக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

    அந்த வகையில் இன்று ஓட்டல்கள், திருமணம், இறுதிச் சடங்குகளில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்பது குறித்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    எல்லாமே ஸ்டாலின் சொன்னது தான்.. ஆனால் ஒரே பந்தில் சிக்ஸர் அடித்து தூக்கியது என்னவோ எடப்பாடி தான்.எல்லாமே ஸ்டாலின் சொன்னது தான்.. ஆனால் ஒரே பந்தில் சிக்ஸர் அடித்து தூக்கியது என்னவோ எடப்பாடி தான்.

    வெப்பநிலை பரிசோதனை

    வெப்பநிலை பரிசோதனை

    இந்த அரசாணையில், ''ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்னரே ஓட்டல்களில் அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டலில் கர்ப்பிணிகள், வயதானவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    மாஸ்க் கையுறை

    மாஸ்க் கையுறை

    உணவகத்தில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். ஹோட்டல், கிளப் வரவேற்பறையில் கிருமி நாசினி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஹோட்டல்கள், கிளப் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கையுறை அணிதல் போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும். ஹோட்டல்களுக்கு வருவோரின் உடமைகள் உரிய முறையில் சுத்தம் செய்த பிறகே அறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    தமிழகத்தில் திருமணம், இறுதிச் சடங்குகளுக்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடரும் நேரு அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் பாட்டில்

    தண்ணீர் பாட்டில்

    பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், பூங்கா செல்வோர் தண்ணீர் பாட்டில்களை கையில் எடுத்துச் செல்ல வேண்டும். பூங்காக்களில் திண்பண்டங்கள் விற்கவும், எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வருவோரை பூங்காவிற்குள் அனுமதிக்கக்கூடாது. பூங்காக்களில் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே மக்களை அனுமதிக்க வேண்டும். மாஸ்க் அணிவதுடன் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    English summary
    Tamil Nadu released government order for hotels, Marriage and park in 4.0 unlock
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X