சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனை ஏப்.30 வரை நீட்டிக்க வேண்டும்.. பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: லாக்டவுனை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

    ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்திருப்பதாக கெஜ்ரிவால் தகவல்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவு உள்ளதால் வரும் 14-ஆம் தேதி முடிவடையவுள்ள லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர்.

    Tamil Nadus CM E Palaniswamy urged the PM to extend the lockdown till April 30

    இதனிடையே ஒடிஸா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லாக்டவுன் முறையே ஏப்ரல் 30, மே 1வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லாக் டவுனை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது 7 முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அது போல் வேளாண், தோட்டக் கலைத் துறைக்கு சிறப்பு திட்டங்களை ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திற்கு மேலும் ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்க வேண்டும்.

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு ரூ 2000 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும் தலா ரூ 2000 வழங்க வேண்டும். பருப்பு, மசாலா உள்ளிட்ட பொருட்களை மாநிலங்களுக்கிடையே லாரி மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    Tamilnadu CM Edappadi Palanisamy urges Prime Minister to extend the lockdown till April 30.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X