சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரவுகளை மதிக்கணும்.. இல்லாட்டி.. தனியார் பள்ளிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தமிழ்நாடு அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: தனியார் பள்ளிகள் 75% கட்டணத்திற்கு மேல் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்று தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

Tamil Nadu School Education Department has ordered private schools not to charge students more than 75% of the fees

அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து முழு கட்டணத்தையும் வசூலித்து வருகின்றன.

அப்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்க விடுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு எச்ச்ரிக்கை விடுக்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும்

அதில் கூறி இருப்பதாவது:- தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து தனியார் பள்ளிகள் நீக்கக் கூடாது. பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும் மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
The Tamil Nadu School Education Department has ordered private schools not to charge students more than 75% of the fees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X