சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10,12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் என்னென்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரானா தொற்று பாதிப்பை தொடர்ந்து மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பள்ளி திறப்பதற்காக தமிழக அரசு பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் 95 சதவீதம் பெற்றோர் பள்ளி திறக்க சம்மதம் தெரிவித்ததையடுத்து நாளை தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 வது வகுப்புகள் திறக்கப்படும் என அறிவித்தது.

Tamil Nadu Schools open tomorrow for 10th and 12th grades - dos and donts

திருச்சியில் உள்ள ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அறைகள், விளையாட்டு திடல்கள் ஆகியவற்றை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் குடிநீர் அருந்தும் பைப்புகள் சுத்தம் செய்து, பகுதிகளில் மாணவர்கள் கைகழுவும் வகையில் சோப்பு வைக்கப்பட்டு, பள்ளி வரும் மாணவ- மாணவிகள் வெப்பமானி கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும் பெற்றோர் இசைவு கடிதம் பெறுவது, மாணவர்கள் வழிநடத்துவது தொடர்பான ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தை பெறுத்தவரை 506 பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்து, கைகால்களை சோப்பு போட்டு கழுவி முககவசம் அணிந்து உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் வகுப்பு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் கூடிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளிகளை கண்காணித்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை :

  • பள்ளிகளை திறப்பதற்கு முன்பு ஒரு சதவிகிதம் சோடியம் ஹைப்போகுளோரைடு கரைசல் தெளித்து பள்ளி வளாகம், தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத்துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி பயன்பாட்டுக்கு வைத்திருக்கப்பட வேண்டும்.
  • பள்ளிகளின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது செயல்படும் இடங்களில் கிருமி நாசினி, சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
  • முதல் கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
  • பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்.
  • பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குவர அனுமதிக்கப்படுவர்.
  • பெற்றோரின் சம்மத்துடன் வீட்டில் இருந்து படித்து வரும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம்.
  • ஒரு வகுப்பில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் ஒரு தொகுதிக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும்.
  • சமூக இடைவெளியை பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் கூடுதல் இருக்கைகளை அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடம் அளிக்கலாம்.
  • இதுபோன்ற நிலையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்றுக் கொடுக்கப்படலாம். அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்.
  • இணையதள வழி- தொலைத்தூர கற்றல் முறை தொடரும்.
  • மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கலாம்.
  • தனியார் பள்ளி நிர்வாகிகள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை திறக்கலாம்.
  • அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
  • அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத்துறையால் வழங்கப்படும்.
  • உடல் வெப்ப பரிசோதனை கருவிகள், கிருமி நாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
  • அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி நுழைவு வாயிலிலும், பள்ளி வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
  • பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றி திரிய அனுமதிக்கக் கூடாது.
  • நுழைவாயில் மற்றும் பள்ளிக்குள் வரிசையில் நிற்கும் போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
  • இறைவணக்க கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
  • நீச்சல் குளங்களை மூட வேண்டும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாட வேளைகள் அனுமதிக்கப்படாது.
  • நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படாது.
  • வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருதல், வெளியேறுதல் ஆகியவற்றுக்கு வெவ்வேறு நேரத்தை நிர்ணயிக்கலாம். வருவதற்கும், செல்வதற்கும் பள்ளிகளில் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும்.
  • வரிசையில் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான இடங்களில் வட்டம், கட்டம் போன்ற குறியீடுகளை தரையில் வரைந்து வைக்க வேண்டும்.
  • வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • ஆசிரியர் அறைகள், அலுவலக பகுதிகள் மற்றும் பிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இடைவேளை நேரம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்வு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதே போல் அனைத்து தனியார் பள்ளி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
English summary
School classes for SSLC, Plus 2 students who are writing the state general examination in Tamil Nadu are to be held from tomorrow. Following this, disinfection and cleaning work is being carried out in schools across Tamil Nadu. A notice has been issued on behalf of the government on what can and cannot be done to prevent the spread of corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X