சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா.. இதுவரை 11 பேர் பலி.. 58 பேர் டிஸ்சார்ஜ்: பீலா ராஜேஷ் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு

    இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1075ல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது.

    Tamil Nadu sees 98 more coronavirus patients: Beela Rajesh

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பீலா ராஜேஷ் கூறியதாவது: 63 ஆயிரத்து 350 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முடிவடைந்து உள்ளது. 12,646 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

    33 ஆயிரத்து 850 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 136 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர். 10 வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளும், 31 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 58 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

    திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அங்கு ஒரே நாளில் 35 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதன் மூலம், திருப்பூர், கொரோனா பாதிப்பில் மோசமான இடத்தை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

    கொரோனா பாதிப்பு.. டாப் கியரில் திருப்பூர்.. ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட ஈரோட்டில் புதிய பாதிப்பு இல்லைகொரோனா பாதிப்பு.. டாப் கியரில் திருப்பூர்.. ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட ஈரோட்டில் புதிய பாதிப்பு இல்லை

    பல மாநில மக்களும் வந்து செல்லும் நகரம் திருப்பூர் என்பதால் இதுபோன்ற பரவல் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. இதுகுறித்து பீலா ராஜேஷிடம் நிருபர்கள் கேட்டபோது, அனைத்து நோயாளிகளும் இதற்கு முன்பு எங்கே இருந்தார்கள், எப்படி பரவியது என்பது குறித்த அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளது, என்று தெரிவித்தார்.

    பீனிக்ஸ் மாலில் சென்று வந்தவர்கள் சுமார் 1000 பேருக்கு பரிசோதனை நடத்தி பார்த்தோம். அதில், யாருக்குமே நோய் தொற்று ஏற்படவில்லை. ஓரிரு நாட்களில் ரேபிட் டெஸ்ட் கருவி தமிழகம் வந்துவிடும். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

    English summary
    Tamil Nadu registered 98 more coronavirus cases on today, says health secretary Beela Rajesh, the total number of patients increased to 1,173.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X