சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பா.. அது ஒரு போதும் நடக்காது... தமிழுக்காக பாடுபடுபவன நான்.. கமல்ஹாசன் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் நிலைப்பாடு ஒரு போதும் மாறாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் சங்கத் நிர்வாகிகளுக்கான தேர்தல் தி. நகரில் உள்ள நடன கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடன இயக்குனர் ஷோபி பால்ராஜ் தலைமையிலான அணியினரும் நடன இயக்குனர் தினேஷ் குமார் அணியினரும் போட்டியிடுகின்றனர்.

Tamil nadu Stand Will never change on issue of Hindi Impose Says Kamal Haasan

தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளி வர எல்லோருடனும் பேசி வருகிறோம். இதற்கு ஆர்ப்பாட்டம், அதட்டல் செய்ய முடியாது. சட்டப்பூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த வறட்சியை சமாளிக்க, தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் மழை நீரைச் சேமிக்க வேண்டும். அது ஒன்று தான் வழி என எனக்கு தோன்றுகிறது. இதற்கு அரசை எதிர்பார்க்காமல் ஒவ்வொரு, தனி மனிதரும் பங்களிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இளம் வயதிலிருந்தே தமிழுக்காக பாடுபடுபவன. அதில் இருந்து நானும் மாறமாட்டேன். இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டில் நிலைப்பாடு ஒரு போதும் மாறாது. அது ஒருபோதும் நடக்காது என்றும் தெரிவித்தார்.

English summary
Makkal needhi maiam leader Kamal Haasan has said that Tamil nadu Stand Will never change on issue of Hindi Impose
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X