சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்! இந்தியா டுடே ஆய்வில் தகவல்! தொடர்ந்து அசத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரக்கூடிய மாநிலமாக இருக்கிறது தமிழகம்.

எனவே ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை பெற்று இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது.

 ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: பணம் வழிப்பறி என தாய் பொய்ப்புகார்: 2 பெண்கள் கைது ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு: பணம் வழிப்பறி என தாய் பொய்ப்புகார்: 2 பெண்கள் கைது

நெகட்டிவ் போகவில்லை

நெகட்டிவ் போகவில்லை

கொரோனா நோய்த்தொற்று காலத்தின் போதும் தமிழகத்தின் பொருளாதார நிலைமை நல்லபடியாக இருந்தது. ஒரு சில மாநிலங்கள் மட்டும்தான் அப்போது எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. அதில் தமிழ்நாடும் ஒன்றாகும். 21.6 லட்சம் கோடி அளவுக்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு உள்ள தமிழ்நாடு இந்த விஷயத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

தமிழகத்தை, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார். இதற்காக பொருளாதார அறிவுரை குழு ஒன்றை அந்த மாநில அரசு அமைத்து இருக்கிறது. இதில் மிகவும் பிரபலமான பொருளாதார வல்லுனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

விவசாயிகள்

விவசாயிகள்

விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தண்ணீர் சேமிப்பு திட்டங்களை மக்களின் ஒத்துழைப்போடு மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அதே நேரம் தமிழகத்துக்கு பல சவால்கள் இருக்கின்றன என்பதையும் மாநில நிதி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்றுக்கொள்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில், மாநில மக்கள் தலைமீது தலா 2.6 லட்சம் கடன் இருப்பதை சுட்டிக்காட்ட தவறுவது கிடையாது.

 பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்


இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், அடித்தட்டு நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாநிலம் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார். இதன்படி, பொருளாதார வளர்ச்சி சமூக நீதி அடிப்படையிலானது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 4 வருடங்கள்

தொடர்ந்து 4 வருடங்கள்

2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருந்தது. தற்போது நான்காவது ஆண்டாக தொடர்ந்து இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

பிற விஷயங்கள்

பிற விஷயங்கள்

அதேநேரம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் துறை வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. சுகாதார விஷயங்களில் கேரளாவுக்கும், கல்வியில் இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கும், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் குஜராத் மாநிலத்திற்கும் இந்திய அளவில் முதல் இடங்கள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்த புள்ளிகளில், தமிழ்நாடு முதலிடம் பிடித்த அசத்தியுள்ளது.

English summary
Tamil Nadu has topped the list of states for overall growth in a study conducted on behalf of India Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X