சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயில் சுவற்றில் கமலா ஹாரிஸ் பெயர்...சகோதரி மாயா மகள்...மீனா ஹாரிஸ் ஆச்சரியப் பதிவு!!

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபருக்கான போட்டியில் நிற்கும் இந்திய வம்சாவழியான கமலா ஹாரிஸ் இன்றும் தமிழகத்தில் பைங்கநாடு கிராமத்தில் இருக்கும் தர்மசாஸ்தா கோயிலுக்கு பணம் செலுத்தி வரும் தகவலும், கோயிலில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

    அமெரிக்க துணை அதிபருக்கான தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தந்தை பிவி கோபாலன் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே இருக்கும் பைங்குடி கிராமத்தில் பிறந்தவர். இவர் மத்திய அரசு பணியில் உயர் பதவியில் இருந்தவர். இங்கு இருக்கும் தர்மசாஸ்தா கோயிலில் பிவி கோபாலன், கமலா ஹாரிஸ் ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம் கமலா ஹாரிஸ் ரொம்ப மோசம்.. ஜோ பிடனை விட மோசம்.. டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்

    சியாமளா கோபாலன்

    சியாமளா கோபாலன்

    கமலாவின் தாய் வழி தந்தையான பிவி கோபாலன் தனது பணி காரணமாக இந்த கிராமத்தை விட்டு வெளியேறினார். சென்னை, டெல்லி, வெளிநாடு என்று பணியாற்றியவர் ஓய்வு காலத்தில் சென்னை பெசன்ட் நகரில் வசித்து வந்தார். இவரது மகள் சியாமளா கோபாலன் ஹாரிஸ் தனது 19 வயதில் அமெரிக்கா சென்றார். அங்கு படிப்பு முடிந்து ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்தார்.

    விவாகரத்து

    விவாகரத்து

    இவர்களுக்கு கமலா ஹாரிஸ், மாயா ஹாரிஸ் என்று இரு மகள்கள் பிறந்தனர். இதையடுத்து, ஏழு ஆண்டுகள் மட்டும் இணைந்து வாழ்ந்த சியாமளாவும், டொனால்டும் விவாகரத்து பெற்றனர். இரண்டு மகள்களை சியாமளா தனியாக வளர்த்தார். அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார். அப்போது கமலா ஹாரிஸ் தனது தாயுடன் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து செல்வது வழக்கம்.

    நன்கொடை

    நன்கொடை

    இவர்களது குடும்பப் பெயர்கள் தர்மசாஸ்தா கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. தாத்தா பிவி கோபாலன், கமலா ஹாரிஸ், சென்னை என்று எழுதப்பட்டுள்ளது. இன்றும் கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் கோயிலுடன் தொடர்பில் இருக்கின்றனர். 1911ஆம் ஆண்டில் கிராமத்தை விட்டு பிவி கோபாலன் தனது பணி காரணமாக வெளியேறியுள்ளார். தொடர்ந்து கோயிலுக்கு அனுப்பப் வேண்டிய நன்கொடையை பிவி கோபாலன் குடும்பத்தினர் அனுப்பி வருகின்றனர் என்ற செய்தியை கோயிலின் நிர்வாகி ரமணி தெரிவித்துள்ளார்.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    இந்த கிராமத்தில் இருக்கும் பலருக்கும் கமலா ஹாரிஸ் தாய் வழி பூர்வீகம் பைங்க்காடு என்பது தெரியவில்லை. கமலாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டிய பின்னர்தான், அந்தக் கிராமத்தினருக்கு கமலா குறித்து தெரிய வந்துள்ளது.

    சட்டம் படித்தவர்

    சட்டம் படித்தவர்

    தற்போது இந்தப் போஸ்டரை வைத்து கமலா ஹாரிஸ் சகோதரி, மாயா ஹாரிஸ் மகள் மீனா ஹாரிஸும் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ''நான் இந்த பதிவை தமிழகத்தில் இருந்து அனுப்புகிறேன். அங்கு இருக்கும் போஸ்டரில் பிவி கோபாலன் பேத்தி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து உள்ளனர். எனது தாயுடன் சென்னை சென்று இருக்கும்போது, என்னுடைய கொள்ளு தாத்தாவை பார்த்து இருக்கிறேன். எனது தாத்தாதான் எனது பாட்டிக்கு பெரிய உந்துதலாக இருந்தார். அவர்கள் அனைவரும் எங்கோ இணைந்து இருப்பார்கள்'' என்று பதிவிட்டுள்ளார். மீனா ஹாரிஸும் தனது தாயைப் போல சட்டம் படித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu: US vice president candidate Kamala Harris name written in Thiruvarur temple wall
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X