சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மாண்டஸ்".. 3 முறை மிஸ் ஆகிடுச்சு.. தமிழ்நாட்டை தாக்கும் "புயல்".. எப்படி உருவாகிறது? இதான் சூட்சமம்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் மாண்டஸ் என்ற புயல் உருவாகி வரும் நிலையில், இந்த புயல் ஏன் இப்போது திடீரென உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு வானிலையில் கடந்த ஒன்றரை மாதமாக எதிர்பார்த்த சம்பவம் நடக்க போகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்தே தமிழ்நாட்டில் புயல் தாக்குமா என்ற கேள்வி இருந்தது.

ஆனால் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து கூட புயல் தாக்காமல் இருந்தது. புயல் மட்டும் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவாமல் இருந்தது.

ராகுலுடன் கைகோர்த்த டிஎம் கிருஷ்ணா.. சூடுபிடிக்கும் பாரத் ஜடோ யாத்திரை! காங்கிரசின் மாஸ் 'மூவ்' ராகுலுடன் கைகோர்த்த டிஎம் கிருஷ்ணா.. சூடுபிடிக்கும் பாரத் ஜடோ யாத்திரை! காங்கிரசின் மாஸ் 'மூவ்'

வங்கக்கடல்

வங்கக்கடல்

வங்கக்கடலில் கடந்த ஒன்றரை மாதமாக ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதுவும் புயலாக மாறாமல் போனதற்கு முக்கிய காரணம் உள்ளது. பொதுவாக புயல் ஏற்பட வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்.

நீண்ட தூரம்

நீண்ட தூரம்

கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும். ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.

மூன்றாவது விஷயம்

மூன்றாவது விஷயம்

அதேபோல் மூன்றாவது விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும். வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இந்த மூன்று விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும்.

தாழ்வு பகுதி

தாழ்வு பகுதி

இந்த நிலையில்தான் தற்போது அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. முன்னதாக இந்த தாழ்வு பகுதி அந்தமான் நோக்கி வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த தாழ்வு பகுதி சீன கடல் பகுதியிலேயே முழுமையாக உருவாகும் முன் அழிந்து போய்விடும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனாலும் ஒருவழியாக தற்போது இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.

புயல்

புயல்

அதன்பின் இது புயலாக மாறும். இங்கே வறண்ட காற்று இல்லை. மாறாக கிழக்கு திசை காற்று விட்டு சென்ற குளிர்ந்த காற்று உள்ளது. அதேபோல் MJO காரணமாக புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் இதன் மைய பகுதியின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது. இப்படி எல்லா விஷயங்களும் புயலுக்கு சாதகமாக உள்ளது. இதன் காரணமாகவே தற்போது இந்த புயல் உருவாகிக்கொண்டு இருக்கிறது. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும். வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது.

3 முறை மிஸ் ஆனது

3 முறை மிஸ் ஆனது

முன்னதாக கடந்த மாதம் முதல் வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இரண்டாம் வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மூன்றாம் வாரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. ஆனால் இது மூன்றும் புயலாக மாறவில்லை. மேலே குறிப்பிட்ட 3 காரணங்களும் இதற்கு எதிராக இருந்தது. இதன் காரணமாக 3ம் புயலாக மாறவில்லை. ஆனால் இந்த முறை சாதகமான சூழ்நிலை நிலவுவதால் புயல் உருவாக உள்ளது.

English summary
Tamil Nadu Weather: How is Mandous cyclone is getting shaped? How it will attack Tamil Nadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X