சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 1000 மி.மீ மழை.. "200 வருட நவம்பர்.." தமிழ்நாடு வெதர்மேன் மேப் போட்டு சொன்ன எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார்.

Recommended Video

    School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil

    நேற்று இரவு தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவர் இந்த எச்சரிக்கையை பிறப்பித்திருந்தார்.

    70% கூடுதலாக கொட்டிய வடகிழக்குப் பருவமழை - விடாமல் வெளுக்கும் மழையால் தமிழகம் தத்தளிப்பு70% கூடுதலாக கொட்டிய வடகிழக்குப் பருவமழை - விடாமல் வெளுக்கும் மழையால் தமிழகம் தத்தளிப்பு

    அதேபோலத்தான் விடிய விடிய இந்த பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. அதிலும் ஆவடி பகுதியில், அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நகர்ந்து வந்த மேகங்கள்

    நகர்ந்து வந்த மேகங்கள்

    தமிழ்நாடு வெதர்மேன் நேற்றிரவு வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது: டெல்டாவில் இருந்து மெதுவாக நகர்ந்த மேகங்கள் நிறைய சோதனை மற்றும் அலுப்பான பயணத்திற்குப் பிறகு சென்னையை அடைந்துள்ளன. சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இரவு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நிலையங்கள் நாளை காலை 100 மிமீ அளவைத் தாண்டிவிடும்.

    எந்த மாவட்டங்களில் மழை

    எந்த மாவட்டங்களில் மழை

    நான் பகிர்ந்துள்ள படங்கள், தாழ்வான இடத்தில் இருந்து கடிகார திசையில் சுற்றும் மேகங்களை சென்னைக்கு தள்ளுகிறது.

    கடலூர், காரைக்கால், விழுப்புரம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கான நேரம். நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்க சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே நவம்பர் மாதம் இதுபோல 1000 மி.மீ மழையை சென்னை நவம்பரில் கடந்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் மேப் வெளியிட்டு எச்சரிக்கை பிறப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட அதன்படிதான் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் போகிறது என்பதால் சென்னை உட்பட 12 கடலோர மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    சாதனை அளவு

    சாதனை அளவு

    மேலும், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே வெதர்மேன் கூறியபடி 70 மில்லி மீட்டர் மழை அளவை சென்னை நேற்று இரவு தாண்டி இருக்கும் என்பதால் நவம்பர் மாதத்தில் 1,000 மில்லி மீட்டர் என்ற சாதனை அளவை சென்னை நகரம் இந்த முறையில் பதிவு செய்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது.

    English summary
    Tamil Nadu Weatherman Pradeep John has warned of heavy rains in Chennai, Kanchipuram, Chengalpattu and Tiruvallur from midnight. He says, Just 70 mm more required in Chennai to cross 1000 mm for the November month has happened only 4 times in 200 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X