சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதி தீவிர புயலாக மாறியது ஃபனி.. வட தமிழகத்தில் நாளை 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. பாலச்சந்திரன்

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால், நாளை முதல் வட தமிழகத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் இன்று அளித்த பேட்டி: ஃபனி புயல், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்பொழுது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 870 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

Tamil Nadu will get moderate rainfall due to Fani cyclone

இது தொடர்ந்து இன்று, தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுபெறக்கூடும்.

இது வரும் ஏப்ரல் 30ம் தேதி (நாளை) முதல் மே 1ம் தேதிவரை, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில், 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வந்து பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும்.

மழையை பொறுத்தளவில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும்.

கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

காற்றை பொறுத்தளவில், வட தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை, மாலை முதல், 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலையில் சில நேரங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள், ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

English summary
From April 30 to May 1st Tamil Nadu will get moderate rainfall due to Fani cyclone, says Chennai Meteorological Department director Balachandran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X