சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 மொழிகளில் தமிழ் பாடநூல்.. தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்கும் வகையில் தமிழ் பரப்புரை கழகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். இதன்மூலம் 24 மொழிகளில் தமிழ் பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது என அவர் பெருமையாக கூறினார்.

தமிழ் பரப்புரைக் கழகம் மூலம் 90 நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், அங்கு தமிழ் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.

உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

தமிழ் மாடலா ? திராவிட மாடலா? பொன்முடியுடன் விவாதத்திற்கு தயார்.. அண்ணாமலை அறிவிப்பு! தமிழ் மாடலா ? திராவிட மாடலா? பொன்முடியுடன் விவாதத்திற்கு தயார்.. அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக அரசு அரசாணை

தமிழக அரசு அரசாணை

இதன் ஒருபகுதியாக தான் தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது.

துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

முதற்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுக என்றால் தமிழ்

திமுக என்றால் தமிழ்

திமுக என்றால் தமிழ். தமிழ் என்றால் திமுக என வளர்க்கப்பட்டது தான் திமுக. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா. அவரது பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரை கழகம் துவங்குவது மிகவும் பொருத்தமானது. அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்துக்கான வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

தொழில்நுட்ப புரட்சி

தொழில்நுட்ப புரட்சி

தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்தது திமுக அரசு தான். இதற்கு சாட்சியாக கம்பீரமாக இன்றும் இருப்பது தான் டைடல் பார்க். 1996ல் முதல்வராக இருந்த கருணாநிதி தகவல் தொழில் நுட்ப புரட்சியை செய்தார். 27 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப புரட்சி மகத்தான வளர்ச்சி பெற காரணமாக இருந்தவர் கருணாநிதி. உலகம் முழுவதும் தமிழக இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி.

24 மொழிகளில் பாடநூல்

24 மொழிகளில் பாடநூல்

அடுத்தக்கட்டமாக கணினிமயமாக்கல். 1999ல் ‛தமிழ் நெட் 99' என்ற தமிழ் இணையவழி மாநாட்டு மூலம் இணைய தமிழ் தொடர்பான முன்னெடுப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு 5.07.2000 தமிழ் இணைய கல்விகழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழின் சொத்துகள் தொகுத்து தொழில்நுட்ப அடிப்படையில் வைத்துள்ளோம். அந்த வழியில் தான் தற்போது தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மொழிகளில் தமிழ் பாடநூல் வெளியிடப்பட்டுள்ளன'' என்றார்.

English summary
Chief Minister Stalin today inaugurated the Tamil Parrapurai Kazhagam for Tamils living abroad to learn Tamil. He proudly said that through this Tamil textbook has been published in 24 languages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X