சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னை தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை... செயல்படுத்துவது கடினமாம்! அமைச்சர் சேகர் பாபுவே சொல்லியாச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: அன்னை தமிழில் அர்ச்சை செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவது கடினம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான அறிவிப்புப் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிட்டார்.

திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை! திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

கோயில்களில் சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழில் அர்ச்சனைகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஆர்வலர்களால் பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்தது.

47 கோயில்களில் தொடக்கம்

47 கோயில்களில் தொடக்கம்

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டது.

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு பலகை

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு பலகை

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இது தொடர்பாக கோயில்களில் வைக்கப்படும் அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த பலகைகளின் வாயிலாக அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறி இருந்தார்.

கபாலீஸ்வரர் கோயில்

கபாலீஸ்வரர் கோயில்

இந்த திட்டம் தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சேகர்பாபு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தியில் இயங்கக்கூடிய 2 சோலார் விளக்கு அமைக்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அமல்படுத்துவது கடினம்

அமல்படுத்துவது கடினம்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற திட்டத்தை செயல்படுவது கடினம். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தமிழ் மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. பக்தர்கள் விரும்பினால் தமிழில் தரிசனம் செய்யலாம். இதுவரை இத்திட்டத்தை 47 கோயில்களில் அமல்படுத்தி இருக்கிறோம்" என்றார்.

English summary
Tamil prayers in Hindu temples is not possible and not Mandatory - Minister Sekar babu says: அன்னை தமிழில் அர்ச்சை செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவது கடினம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X