சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யூடியூப் மூலம் கட்கரியை விட அதிகம் சம்பாதிக்கும் தமிழ் டிவி ஸ்டார்ஸ்.. வாய் பிளக்கும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யூடியூப் மூலம் 4 லட்சம் சம்பாதிக்கிறார் என அவரே கூறியிருந்த நிலையில் அவரைக் காட்டிலும் டிவி பிரபலங்கள் அதிகளவு சம்பாதிக்கிறார்கள் என்ற வாய் பிளக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமைச்சராக உள்ள நிதின் கட்கரி கடந்த கொரோனா ஊரடங்கின் போது தான் இரு விஷயங்களை செய்து மாதம் ரூ 4 லட்சம் ஈட்டினேன் என்றார். அப்படி தான் என்னதான் செய்கிறேன் என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்! சிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்!

அதாவது கொரோனா காலத்தில் சமையலை கற்றுக் கொண்டேன். மேலும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் எடுத்து அதை வீடியோவாக யூடியூப்பில் போட்டு ரூ 4 லட்சம் வருமானம் ஈட்டினேன் என அவர் தெரிவித்திருந்தார்.

திறமையும் உழைப்பும்

திறமையும் உழைப்பும்

இதன் மூலம் அவர் சொன்ன விஷயம் திறமையும் கடும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என பாசிட்டிவிட்டியை இளைஞர்கள் மனதில் உருவாக்கும் வண்ணம் அவர் ஓபனாக பேசியிருந்தார். இதை கேட்ட பலர் ஆத்தாடி.. 4 லட்சமாக என வாய் பிளந்தனர். ஆனால் இவர்கள் டிவி நடிகர், நடிகைகள் யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என தெரிந்தால் அவ்வளவுதான் போலயே!

நடிகைகள்

நடிகைகள்

டிவி நடிகர், நடிகைகள் யூடியூப் சேனல் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். இதில் இரு டிவி பிரபலங்கள் டாப்பில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மாதத்திற்கு 7 லட்சமும் இன்னொருவர் 6 லட்சமும் சம்பாதித்து வருகிறார்கள். டிவி தொகுப்பாளினிகள் பிரியங்கா தேஷ்பாண்டே, மணிமேகலை, விஜே அர்ச்சனா பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, செம்பருத்தி லட்சுமி, கில்லி ஜெனிபர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் யூடியூப் சேனல் மூலம் கணிசமாக காசு பார்க்கிறார்கள். இந்த வருமானமும் ஒரு மாதம் வரும், இன்னொரு மாதம் வராது, அதற்கு அடுத்த மாதம் டபுளாக வரும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.

பொதுமக்கள்

பொதுமக்கள்

திரைப்பிரபலங்கள் இல்லாமல் பொதுமக்களும் யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்து வருகிறார்கள். சமையல் கலை, வெளிநாடுகளை சுற்றி காட்டுவது, விவசாயம், புதிய தொழில், புதிய தொழில்நுட்பம், உடற்பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவைகளில் திறமைகேற்ப அவர்களது தங்கள் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆங்கில அறிவு

ஆங்கில அறிவு

இதிலும் பலர் அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆங்கில அறிவை சொல்லித் தருவது உள்ளிட்டவைகளையும் சொல்லித் தருகிறார்கள். இன்னும் சிலர் தங்களது சில சிறிய ஆராய்ச்சிகள் மூலம் செய்த அறிவியல் நுட்பங்களையும் டிஐஒய் எனப்படும் Do It Yourself என பெயரில் தொடங்கி கல்லா கட்டி வருகிறார்கள். மாடி தோட்டம் குறித்த வீடியோக்களை போட்டு இயற்கை குறித்து மக்களுக்கு ஆர்வத்தை அதிகரித்து வருகிறார்கள். இதை பிரபலங்களும் செய்கிறார்கள்.

ஹவுஸ் டூர்

ஹவுஸ் டூர்

அது போல் மேக்கப் எப்படி போடுவது, ஹவுஸ் டூர், கிச்சன் டூர், பிரிட்ஜ் டூர் என்ற வரிசையில் சிலர் பாத்ரூம் டூரையும் போட்டு இணையதளத்தில் டிரென்டாகினர். சிலர் கண்டனத்துக்குள்ளாகினர். எனவே திறமையும் மெனக்கெடலும் உழைப்பும் இருந்தால் யூடியூப் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதே இதன் மூலம் அறியப்படும் விஷயமாகும்.

English summary
Tamil serial popularities earn more than that of Union Minister Nitin Gadkari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X