சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழிக்காக விரைவில் அரசாணை!

Google Oneindia Tamil News

சென்னை; தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்திதான் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்தான் அதிகம் பணிபுரிகின்றனர்.

Tamil Tobe official language in Central Govt Offices, says Ma Foi Pandiarajan

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக வெடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழருக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோரும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.

இதற்காக மகாராஷ்டிராவைப் பின்பற்றி அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றார்.

English summary
Tamilnadu Minsiter Ma Foi Pandiarajan said that Tamil to be official language in central Govt Offices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X