சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மறைந்திருந்த மனிதம்.. கை கொடுத்து காப்பாற்றிய 20 நிமிடம்.. பிரான்சிஸ் கிருபா மீண்டது இப்படித்தான்!

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா விடுதலை.. 20 நிமிட சிசிடிவி காட்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    கைதுசெய்யப்பட்ட எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா மீண்டது இப்படித்தான்- வீடியோ

    சென்னை: "நான் கொலை செய்யல.. கொலை செய்யல.." என்று சொல்லி கொண்டே இருந்தார் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா! அந்த பேச்சு எடுபடாமலே போய்.. உச்சக்கட்ட அவமானத்தையும், அளவுக்கு மீறின இழுக்கையும் கொஞ்ச நேரத்திலேயே சம்பாதித்து விட்டார் பிரான்சிஸ்.. தமிழ் கூறும் நல்லுலகு ஒரு எழுத்தாளனை ஒரே நாளில் காயப்படுத்திவிட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில்தான் அந்த பிரச்சனை நடந்தது. ரெண்டு பேர் போதையில் சண்டை போட்டு கொண்டதாகவும், அதில் கீழே தள்ளிவிட்டதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் இன்னொரு நபரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. ஒன்று, சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் வாக்குமூலம். இரண்டு, சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள்!

    ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்.. திமுகவினரை சந்திக்கும் கேசிஆர்.. கலக்கத்தில் காங்கிரஸ்! ஸ்டாலின் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்.. திமுகவினரை சந்திக்கும் கேசிஆர்.. கலக்கத்தில் காங்கிரஸ்!

    இரும்பு கம்பி

    இரும்பு கம்பி

    ஆனால் முழு விசாரணை இல்லாமல் இந்த வழக்கு ஆரம்பத்தில் கையாளப்பட்டது. கைது செய்யப்பட்டவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா. "செத்து போனவருக்கு வலிப்பு வலி வந்துவிட்டது. ஒரு இரும்பு கம்பி கொடுத்து காப்பாற்றினேன். மூச்சு திணறல் வந்துவிட்டது. நான் கொலை செய்யல"என்ற வார்த்தைகளும் போலீசார் காதில் எடுபடவே இல்லை.

    பிரான்சிஸ் கிருபா

    பிரான்சிஸ் கிருபா

    போலீசார் கண்ணில் இருந்து எதுவுமே தப்ப முடியாது என்று சொல்வதுண்டு. ஒருவரது தோற்றத்தை வைத்து ஒரு முடிவுக்கு போலீசார் வந்தது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. பிரான்சிஸ் கிருபா ஒருபடத்தில் நடிப்பதற்காக தாடி, பரட்டை தலைமுடியுடன் இருந்திருக்கிறார். பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தார், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோற்றம், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதா? மனநல ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதா என்ற குழப்பம்.. என்றெல்லாம் போலீசார் யூகித்தனர்.

    ஆதாரங்கள்

    ஆதாரங்கள்

    கடைசியில் மரணம் அடைந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் வலிப்பு நோயினால்தான் உயிரிழந்தார் என்றும் தெளிவாகி உள்ளது. உண்மையிலேயே, சாட்சிகள், விசாரணைகள், ஆதாரங்களைவிட பிரான்சிஸ் கிருபாவை விடுவிக்க உதவியது அவரது எழுத்துக்கள்தான்.

    ஆக்ரோஷ பதிவுகள்

    ஆக்ரோஷ பதிவுகள்

    பிரான்சிஸ் கிருபாவின் எழுத்துக்களை நேசித்தவர்கள், அந்த மரணத்துக்கு பிரான்சிஸ் காரணமாக இருக்க மாட்டார் என்றே இணையத்தில் நம்பிக்கையுடனும் வேகத்துடனும் பதிவிட்டனர். இந்த ஆக்ரோஷ பதிவுகள்தான் எதிர்மறை செய்திகளை மாற்றி, உண்மையை வெளிக்கொணர உதவியது.

    போதை சாமி

    போதை சாமி

    கடைசியாக இந்த வழக்கில் 20 நிமிட சிசிடிவி காட்சிகளும் பெரிதும் துணை நின்றது. அந்த வீடியோ காட்சியில், யாரை போதை ஆசாமி என்றார்களோ, யாரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றார்களோ, யாரை கொலையாளி என்றார்களோ, அவர்தான் மெல்ல மெல்ல பிரிந்து கொண்டிருந்த அந்த உயிரை காப்பாற்ற கண்ணீருடன் துடித்து போராடிக் கொண்டிருக்கிறார் என்று!

    எப்படியோ "தமிழ்" பிழைத்தது!

    English summary
    Writer Francis Kiruba released after postmortem report youngster and 20 minutes CCTV Footage
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X