சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கே.வி. ஜெயஶ்ரீக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது

Google Oneindia Tamil News

சென்னை: சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது தமிழகத்தின் கே.வி. ஜெயஶ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கே.வி. ஜெய்ஶ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர்.

Tamil writer JayaSree wins Sahitya Akademi award

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் உறவினர். இவரது சகோதரி ஷைலஜா பதிப்பக உரிமையாளர் ஆவார்.

ஸ்டாலின் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.வி.ஜெயஶ்ரீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள ஸ்டாலின் . சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருதை பெற்றுள்ள கே.வி.ஜெயஶ்ரீ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழக சங்க இலக்கியக் காட்சிகளை மையமாக வைத்து மலையாளத்தில் எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய நாவலை கேவி ஜெயஶ்ரீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். ' நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற அந்த நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றுள்ளது. கேவி ஜெயஶ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும்! தமிழ்ப்படைப்புலகம் செழிக்கட்டும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Tamil writer JayaSree wins Sahitya Akademi award for translation work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X