சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது லிஸ்ட்லயே இல்லையே! தவாக வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில்..! அண்ணாமலை போட்ட பக்கா பிளான்..!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலராக இருந்தவர் பண்ருட்டி வேல்முருகன். ஒருகாலத்தில் பாமகவின் ஆற்றல்மிக்க பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001இலும் 2006இலும் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தமிழ் தாய் படத்தில் ’ஸ’! கேள்வி கேட்டீர்களே.. முதல்வர் பெயரின் முதலெழுத்து என்ன? பாஜக அண்ணாமலை கேள்வி தமிழ் தாய் படத்தில் ’ஸ’! கேள்வி கேட்டீர்களே.. முதல்வர் பெயரின் முதலெழுத்து என்ன? பாஜக அண்ணாமலை கேள்வி

பண்ருட்டி வேல்முருகன்

பண்ருட்டி வேல்முருகன்

பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது அப்போது பாமகவின் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையைடுத்து கடந்த 12 ஆண்டுகளாக தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியை தொடங்கி தமிழக மக்களின் வாழ்வுரிமை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருவதுடன், வட மாவட்டங்களில் பாமகவுக்கு எதிராக வன்னிய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் தலைவராக இருந்துவருகிறார். மேலும் அதிமுக பாஜகவுக்கு எதிராக கடுமையான பேசி வந்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்தார்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தனிச் சின்னம் இல்லாத நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் நுழைந்தார். இதையடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சிக்கு உரிய இடங்களை திமுக தலைமை கொடுக்கவில்லை எனவும் திமுக நிர்வாகிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை மரியாதைக்குறைவாக நடத்துகிறார் என பரபரப்பு குற்றம்சாட்டிய நிலையில் அதன் பிறகு அவரது அரசியல் நடவடிக்கைகள் சற்று குறைந்தன.

காயத்ரி பாஜக

காயத்ரி பாஜக

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே வேல்முருகனிடமிருந்து காய்த்ரி விவாகரத்து பெற்றது குறிபிடத்தக்கது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவரை மாநில தலைவர் அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கி பாஜகவுக்கு வரவேற்றார்.

பலே திட்டம்

பலே திட்டம்

இந்த நிகழ்ச்சியில் பாஜக இளைஞரணி நிர்வாகி வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பலர் இருந்தனர். கடந்த சில நாட்களாகவே திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் உறவினர்கள் பாஜகவில் ஐக்கியமாவது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரம் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரான மறைந்த க.அன்பழகனின் பேரனுமான அன்புகிரி பாஜகவில் இணைந்துள்ளது.

English summary
Gayatri, the ex-wife of tamilaga valvurimai katchi president and legislator Panruti Velmurugan, has joined the BJP and caused a stir in the political arena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X