சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களுக்கு அல்வா கொடுப்பதில் முதல்வரை மிஞ்சமுடியாது... வேல்முருகன் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: மக்களுக்கு அல்வா கொடுப்பதிலும், இரட்டை வேடம் போடுவதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைதேர்ந்தவர் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

சிறுபான்மையின மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்னிற்போம் எனக் கூறிய அதிமுக, இன்று சி ஏ ஏ-வை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் இதையெல்லாம் சட்டையே செய்யாத பழனிசாமி இப்போது ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்' என்று கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தச் செய்தியைப் படித்தபோதுதான் அதில் செய்யப்பட்ட ஊடுவேலை' தெரிந்தது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதாவது தலைப்பில்தான் ‘ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்'என்பதே தவிர, உள்ளே ‘ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும்' என்பதுதான் செய்தியின் சாரம். இந்த செய்தியைப் படித்தபோது, இதுவரை அங்கு ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லாதது போலவும் இனிமேலும் வரக்கூடாது என்பதாகவும்தானே ஆகிறது? எப்படிப்பட்ட பச்சைப் பொய் இது!

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததே! இவை மட்டுமா? இவ்வளவையும் செய்துவிட்டுத்தான் ‘காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்' என்பதாகக் கடிதம். இது பச்சைப் பொய் மட்டுமல்ல; இரட்டை வேடம் போடுவதாகும், மக்களுக்கே அல்வா கொடுப்பதாகும்.

நீட் விவகாரம்

நீட் விவகாரம்

இப்படி இரட்டை வேடம் போட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பது கூட பழனிசாமி அரசுக்குப் புதிதல்ல. ஏற்கனவே ‘நீட்' விடயத்தில் நடந்ததுதானே இது! ஒன்றிய அரசுக்கு சட்டமன்றத் தீர்மானம்தான் அனுப்பியிருக்கிறதே என்று சொல்லியேவந்து, கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தானே தீர்மானத்தை எப்போதோ ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்ட உண்மை தெரியவந்தது!

பிரச்சனை

பிரச்சனை

சிறுபான்மையினருக்குப் பாதிப்பென்றால் முதல் ஆளாய் முன்னிற்போம் நாம் என்கிறது அதிமுக. ஆனால் சென்னை பழைய வண்ணார்பேட்டையில் ‘சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்' என்று கேட்டுப் போராடிய இஸ்லாமியர்களை,
பெண்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்த அரசுதானே அதிமுக.

English summary
tamilaga vazhvurimai katchi president velmurugan condemn to cm edappadi palanisami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X