சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனவரி 31 வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன்.. கோவில்களில் நேர கட்டுப்பாடு இல்லை- அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், பல கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

கொரோனா நோயிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அரசு. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா குறைந்தது

கொரோனா குறைந்தது

தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கையினால் நோய்த்தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7% கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100 நபர்களுக்கு கீழே உள்ளது. சிகிச்சையிலிருந்த நோயாளிகள் எண்ணிக்கை சுமார் 50,000 என்ற அளவிலிருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தளங்களில் நான் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும், 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து தற்போதுள்ள நிலைமை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரானா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் டிசம்பர் 31ஆம் தேதி முடிய, தமிழ்நாடு முழுவதும் தற்போது உள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும், கீழ்கண்ட தளர்வுகளுடன், 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமல்படுத்தப்படும்.

தியேட்டர்களில் 50 சதவீதம் ரசிகர்கள்

தியேட்டர்களில் 50 சதவீதம் ரசிகர்கள்

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 50 சதவீதத்துடன் இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரம், கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1ம் தேதி முதல் தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில், காவல்துறை ஆணையர் அவர்களிடம் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

வழிபாட்டு தலங்கள்

வழிபாட்டு தலங்கள்

திரைப்படம் மற்றும் சின்னத்திரை உள்ளிட்ட திரைப்பட தொழில்களுக்கான உள்ளரங்கு மற்றும் திறந்த வெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களிலும் வழக்கமான நடைமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி காலக்கெடு கட்டுப்பாடுகள் இன்றி வழக்கமான நடைமுறைப்படி, பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

இ-பதிவு நடைமுறை

இ-பதிவு நடைமுறை

ஏற்கனவே, நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து (புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்கள் தவிர) தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு நடைமுறை தொடரும்.

விமான போக்குவரத்து தடை

விமான போக்குவரத்து தடை


மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

மக்களுக்கு வேண்டுகோள்

மக்களுக்கு வேண்டுகோள்

மேலும், காணும் பொங்கலன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும், அதாவது ஜனவரி 16 ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், சோப்பை பயன்படுத்தி தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்நோய் தொற்றை குறைக்க முடியும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி உங்கள் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Lockdown: With more relaxations lockdown to continue till January 31 in Tamil Nadu, says CM Edappadi Palniswami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X